side Add

குண்­டுச் சட்­டிக்­குள் ஓடும் அர­சி­யல் குதி­ரை­கள்!!

அண்­மை­யில் நிகழ்வு ஒன்­றில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏப்­ர­காம் சுமந்­தி­ரன், பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்­குள் தீர்வு காண்­ப­தற்­கான தற்­போ­தைய இறு­திச் சந்­தர்ப்­பத்­தைச் சிங்­கள மக்­கள் தவ­ற­விட்­டு­வி­டக்­கூ­டாது என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

அர­சுக்­கும் தெற்கு அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கு­மான ஓர் எச்­ச­ரிக்­கை­யா­கவே அவர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தார். அவரே கூறும் மென்­போக்கு அர­சி­யல் பாணி­யில் அவர் இந்த எச்­ச­ரிக்­கையை தெற்கு அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தி­னார் என்­றும் சொல்­ல­லாம்.

நேர­டி­யா­கச் சொன்­னால் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கத் தவ­று­வீர்­க­ளாக இருந்­தால் நாங்­கள் மீண்­டும் தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கையி­லெ­டுப்­போம் என்­பதே அதன் பொருள் என்று கொள்­ள­வேண்­டும். ஆனால், சுற்­றி­வ­ளைத்து மூக்­கைத் தொட்ட சுமந்­தி­ரன், இறு­திச் சந்­தர்ப்­பத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள் –என்­றார்.

மீண்­டும் தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கையில் எடுப்­போம் என்று அவர் நேர­டி­யா­கச் சொல்­லா­மல்­விட்­ட­தற்­கான கார­ணம், இனி­மேல் அப்­ப­டிச் சொன்­னால் மக்­கள் ஏற்­றுக்­கொள்­வார்­களோ என்­கிற அச்­சம் கார­ண­மா­க­வும் இருக்­க­லாம். 30 வருட கால ஆயு­தப் போராட்ட காலத்­தின் பின்­ன­ரான சூழ­லில் தனிக் குடும்ப வாழ்க்கை மேம்­பாட்டை நோக்கி ஓடத் தொடங்­கி­விட்ட, அபி­வி­ருத்தி அபி­வி­ருத்தி என்று அர­சி­யல்­வா­தி­க­ளும் ஆலாய் பறக்­கத் தொடங்­கி­விட்ட நிலை­யில் மீண்­டும் தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைத் தூக்­கிப் பிடிப்­பது சாத்­தி­யம்­தானா என்­கிற அச்­சம் கார­ண­மா­க­வும் அவர் அதனை நேர­டி­யா­கச் சொல்­லா­மல் விட்­டி­ருக்­க­லாம். அந்த அச்­சம் அவ­ருக்கு மட்­டு­மல்ல இங்­கி­ருக்­கும் எல்­லாத் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் உண்­டென்­ப­தை­யும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும். அத­னால்­தான் மூச்­சுக்கு முந்­நூறு தட­வை­கள் கூட்­டாட்சி கூட்­டாட்சி என்று கூறிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். தனி­யாட்சி என்­பதை உச்­ச­ரிக்­கவே அஞ்­சு­கி­றார்­கள்.

சுமந்­தி­ர­னின் எச்­ச­ரிக்கை நேர­டி­யாக இருந்­தா­லும் மறை­மு­க­மா­ன­தாக இருந்­தா­லும் அது எதிர்­பார்க்­கப்­பட்ட பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யதா தெற்­கில் என்­றால், மகிந்த தர­பி­ன­ரி­டம் இல்லை என்­று­தான் சொல்­ல­வேண்­டும். இது இறுதி வாய்ப்­பெல்­லாம் இல்லை, தமிழ் மக்­கள் பொறுமை காத்­தால் அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய “அர்த்­த­முள்ள” அதி­கா­ரப் பகிர்வை நாமே வழங்­கு­வோம் என்று தனது வழக்­க­மான திமி­ரோடு சுமந்­தி­ர­னின் எச்­ச­ரிக்­கையை தூக்­கிப் போட்­டு­விட்­டார் மகிந்த.

ஜே.வி.பியி­ன­ரி­டம் இருந்து இது­வ­ரை­யில் அதற்கு எதிர்­வினை ஏது­மில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ரி­டம் இருந்­தும் குறிப்­பி­டத்­த­குந்த எதிர்­வினை இல்லை. புதிய அர­ச­மைப்பை எப்­ப­டி­யும் கொண்டு வந்தே தீரு­வோம் என்­கிற வழக்­க­மான புரா­னத்­துக்கு மேலாக எந்­தக் கருத்­தும் வெளி­வ­ர­வில்லை.
புதிய அர­ச­மைப்பு தொடர்­பான முயற்­சி­க­ளில் முழு­மூச்­சோடு ஈடு­பட்­ட­வர் சுமந்­தி­ரன். ரணில் மற்­றும் மைத்­திரி ஆகி­யோர் ஏதா­வது செய்­வார்­கள் என்­கிற நம்­பிக்­கை­யோடு அதில் ஈடு­பட்­ட­வர். அவரே எச்­ச­ரிக்கை விடும் அள­விற்கு தெற்­கின் அர­சி­யல்­வா­தி­கள் இன­வா­தச் சக­தி­யில் ஊறிக் கிடக்­கி­றார்­கள் என்­பதை சுமந்­தி­ர­னின் உரை­யும் அதற்­கான தெற்­கின் எதிர்­வி­னை­க­ளும் தெளி­வா­கப் புலப்­ப­டுத்­து­கின்­றன.

அடுத்த தேர்­த­லில் பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­க­ளின் வாக்­கு­க­ளைக் கவர்­வ­து­தான் தெற்கு அர­சி­யல் கட்­சி­கள் அனைத்­தி­ன­தும் ஒரே நோக்­கம். எனவே அடுத்­த­டுத்து வரப்­போ­கும் தேர்­தல்­க­ளுக்கு மத்­தி­யில் இந்த அர­சி­யல்­வா­தி­கள் முற்­போக்­காக எதை­யும் பேசப்­போ­வதோ செய்­யப்­போ­வதோ இல்லை என்­பதை வர­லாறு தெளி­வு­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது. தேர்­தல் முடிந்த பிற்­பாடு மீண்­டும் இது குறித்து அடுத்த தேர்­தல் வரை முற்­போக்­கான கருத்­துக்­களை அவர்­கள் நிச்­ச­யம் பேசு­வார்­கள். இது­தான் இலங்கை அர­சி­ய­லின் பால­பா­டம்.

தமிழ்த் தலை­வர்­க­ளுக்­கும் இது தெரி­யாத ஒன்­றல்ல. ஆனால், புதிய வழி­யைக் கண்­ட­றிய முடி­யா­த­தால் அவர்­க­ளும் மாறி மாறி குண்­டுச் சட்­டிக்­குள் குதி­ரை­யோ­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

You might also like