கொக்குவில் இந்து மாணவர்கள்- 25 பேருக்கு எதிராக முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு எதிராக பாடசாலை அதிபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துர்நடத்தை செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

”பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுகின்றனர். அவ்வாறு 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவும்” என்று தனது அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close