கொழும்புக் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்- மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்!!

கொழும்பில் அகற்றப்படுகின்ற குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதனை எதிர்ப்புத் தெரிவித்து, அங்குள்ள மக்கள் இன்று புத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் அறுவாக்காட்டில் கொழும்பு குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக , புத்தளத்தில் 13 நாள்களாக தொடராக மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம், தீர்வின்றித் தொடர்வதால், இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதான சுற்று வட்டத்துக்கு வருகை தந்து அங்கிருந்து, குருநாகல் வீதி வழியாக புத்தளம் மாவட்ட செயலகத்தை அடைந்தனர்.

புத்தளம் மாவட்ட சர்வமத ஒன்றிய தலைவர்களால் புத்தளம் மாவட்டச் செயலாளரிடம் மனுக் கையளித்தனர்.

You might also like