ஜீவநகர் கிராமத்தில்- 25 வீடுகளுக்கு அடிக்கல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ஜீவநகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாதிரிக் கிராமத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

24 வீடுகளுடன் மாதிரிக்கிராம் அமைக்கப்படவுள்ளது.

முத்துஜயன்கட்டுகுளம் கிராம அலுவலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான ச. சந்திரரூபன் ச. தில்லைநடராஜா மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like