side Add

தொடருந்து விபத்தில் பெண்கள் இருவர் காயம்

இந்த விபத்து மீகொட தல்பொலவத்த தொடருந்துப் பாதுகாப்பு கடவையில்  இடம்பெற்றுள்ளது.

பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவை காரணமாக இந்த விபத்து சம்பவித்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பிலான சீசீடிவி காட்சிகள் அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

விபத்தின் பின்னர் கார் தொடருந்துடன் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமகம மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

You might also like
X