தொலைபேசி பயன்படுத்தாமல் சாப்பிட்டால் பீட்சா இலவசம்!!

கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தாமல் தங்கள் கடையில் சாப்பிட்டால் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா இலவசமாக வழங்குவோம் என்று அமெரிக்கா நாட்டில் உள்ள பீட்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃப்பெரெஸ்னோ நகரில் உள்ளது கரி பிட்ஸா நிறுவனமே இதனை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் பீட்சா சாப்பிட வருபவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் சாப்பிட்டால் இலவசமாக பீட்சா வழங்கப்படும். மேலும் குழுவாக வந்தால் அந்தக் குழுவில் நான்கு பேராவதும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பீட்சா கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தங்கள் கையடக்க தொலைபேசியை கடை ஊழியர்களிடம் கொடுத்துவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like