தொழிலாளர்களின் 10 குடியிருப்புகள் தீக்கிரை!!

தலவாக்கலை சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன.

சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 05 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டேலின் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை.

You might also like