நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யா­ருக்கு -பொங்­கல் பொங்கி வழி­பாடு!!

0 13

முல்­லைத்­தீவு, செம்­மலை நீரா­வி­ய­டி­யில் உள்ள தொன்மை மிக்க பிள்­ளை­யார் ஆல­யத்­தில் நேற்­றுப் பொங்­கல் வழி­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

முல்­லைத்­தீவு, கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச செய­ல­கப் பிரி­வில், செம்­மலை கிழக்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் நாயாற்­றுப் பகுதி நீரா­விக் கிரா­மத்­தில் உள்ள தமிழ் மக்­க­ளின் பூர்­வீ­கக் காணி­க­ளில் 60 அடி விகாரை அமைப்­ப­தற்கு அந்­தக் காணி­களை அள­வி­டும் நோக்­கு­டன் கடந்த 7ஆம் திகதி நில அள­வை­யா­ள­ரும், மற்­றும் சில­ரும் சென்­றி­ருந்­த­னர். அவர்­கள் காணி­களை அள­வி­டு­வ­தற்­குத் தயா­ரா­கி­னர்.

நாயாற்­றுப் பகு­தி­யில் நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யம் அமைக்­கப்­பட்­டி­ருந்த இடம் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மா­ன­தும், ஏற்­க­னவே அனு­ம­திப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ள­து­மான காணி­கள் தொல்­லி­யல் திணை க்களத்­தால் 2013, ஓகஸ்ட் 16ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­தல் மூலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அந்த இடத்­தில் 60 அடி உய­ர­மான குருக்­கந்த ராஜ­மஹா விகாரை அமைக்­க­வும் தொல்­லி­யல் திணைக்­க­ளம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பான நில அளவை நட­வ­டிக்­கை­கள் கடந்த 2018, ஜூலை 3ஆம் திக­தி­யன்று நடை­பெற்ற போது, பொது மக்­க­ளா­லும் அர­சி­யல் தலை­வர்­க­ளா­லும் அது தடுத்து நிறுத்த ப்பட்­டது.

இது தொடர்­பில் உரிய முடி­வு­கள் எட்­டப்­பட்ட பின்­னரே நில அளவை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ள­லாம் என்று மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத்­த­லை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சி.சிவ­மோ­கன் தீர்­மா­னத்தை நிறை ­வேற்­றி­யி­ருந்­தார். இந்த நிலை­யி­லேயே கடந்த 7ஆம் திகதி நில அளவை முயற்சி எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதை­ய­றிந்த மக்­க­ளும், மக்­கள் பிர­நி­தி­க­ளும் அந்த இடத்­துக்­குச் சென்று எதிர்ப்பை வெளி­யிட்டு அந்த நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்­தி­னர்.

அந்­தப் பகு­தி­யில் உள்ள தொன்­மை­யான பிள்­ளை­யார் ஆல­யத்­தில் நேற்­றுப் பிர­தேச மக்­கள் பொங்­கல் பொங்­கித் தமது பாரம்­ப­ரிய வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­னர்.

You might also like