side Add

பயங்கரவாதத்துக்கு தனியான சட்டம் தேவையில்லை – சுமந்திரன் எம்.பி!!

பயங்­க­ர­வா­தத்­துக்கு என்று தனி­யா­ன­தொரு சட்­டம் தேவை யில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பொது­வான நிலைப்­பாடு இதுவே. இவ்­வாறு அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு ­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

 

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதன்­போது, நாடா­ளு­மன்­றில் சமர்­பிக்­கப்­பட்­டுள்ள புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­ட­வ­ரைவு தொடர்­பி­லும் பேசப்­பட்­டுள்­ளது.

 

புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­ட­வ­ரைவு, நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்­புச் சட்­டத்தை விட மோச­மான ஒன்­றாக ஆரம்­பத்­தில் இருந்­தது. அதி­லி­ருந்த முக்­கி­ய­மான 4 விட­யங்­கள் தொடர்­பில் நாங்­கள் எங்­க­ளின் ஆட்­சே­ப­னை­யைத் தெரி­வித்­தி­ருந்­தோம்.

 

அதற்கு அமை­வாக அவை மாற்­றப்­பட்டு புதிய வரைவு சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. சமர்­பிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வ­ரைவு தொடர்­பில் நாம் ஆழ­மா­கப் படிக்­க­வேண்­டும்.

 

எங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பயங்­க­ர­வா­தத்­துக்கு என்று தனி­யான சட்­டம் தேவை­யில்லை. நடை­மு­றை­யி­லுள்ள சிவில் மற்­றும் குற்­ற­வி­யல் சட்­டங்­களே போது­மா­னது. உல­கில் எல்லா நாடு­க­ளி­லும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான சட்­டம் நடை­மு­றை­யில் இருப்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்­கின்­றோம்.

 

நடை­மு­றை­யில் உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தில் உள்ள பல விட­யங்­கள் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்­புச் சட்­டத்­தில் நீக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றை நாம் செய்­வித்­தோம். எம்­மைப் பொறுத்­த­வ­ரை­யில் பயங்­க­ர­வா­தத்­துக்கு தனி­யான சட்­டம் தேவை­யில்லை என்­ப­து­தான் நிலைப்­பாடு.

 

ஆனா­லும், இந்­தச் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­ற ­போது, அது நாங்­கள் வாக்­க­ளிக்­கா­மை­யி­னால் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்­டால் அந்­தப் பழிச்­சொல் எங்­கள் மீது விழா­மல் இருப்­பது தொடர்­பி­லும் ஆராய்­கின்­றோம்.

 

வாக்­க­ளிப்பு நேரத்­தில் இருக்­கின்ற சூழ்­நி­லை­யைப் பொறுத்தே முடிவு எடுப்­போம். இந்த விட­யத்­தில் இப்­போது எந்­த­வொரு முடி­வை­யும் இறு­தி­யாக எடுக்­க­வில்லை – என்­றார்.
You might also like