பாகற்காய் ஊறுகாய்!!

தேவையானவை

பாகற்காய் – 200 கிராம்

நல்லெண்ணெய் – 100 கிராம்

மிளகாய் தூள் – காரத்துக்கு ஏற்ப

வெந்தைய தூள் – 2 தேக்கரண்டி

பெருங்காய் தூள் -1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கல் உப்பு – சுவைக்கேற்ப.

வினிகர் – 150 மில்லி அல்லது தேவையான அளவு எலும்மிச்சை பழச்சாறு

செய்முறை:

பாகற்காயை நன்றாக கழுவி துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . அதன்பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.

இந்த கலவையை சரியாக ஒரு நாள் வரை மூடி போட்டு வைத்து விட வேண்டும். கண்ணாடிப் போத்தலில் போட்டு வைத்தல் மிக நல்லது. மறுநாள், அடுப்பில் இரும்பு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடுகை போட்டு பொரிய விட வேண்டும்.

அத்துடன் பெருங்காய தூள், வெந்தய தூள் இவற்றைப் போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும். மிளகாய்த்தூள் போட்ட மறு நிமிடமே உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பாகற்காய் ஒரு அளவு வதங்கியதும், அதில் வினிகரை அல்லது எலும்பிச்சை பழத்தின் சாற்றைச் சேர்க்க வேண்டும். இது நன்றாக வற்றும் வரை கிளறிவிட வேண்டும். அதன்பின்னர் எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஊறுகாய் பதத்துக்கு வந்ததும், அதனை ஆறவைத்து கண்ணாடிப் போத்தலில் போட்டு வைக்க வேண்டும். இப்போது சுவையான பாகற்காய் ஊறுகாய் தயார்.

You might also like