side Add

பாகிஸ்தானை வீழ்த்தியது தெ.ஆபிரிக்கா!!

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்­டா­வ­து டெஸ்ட் ஆட்­டத்­தில் 9 இலக்­கு­ க­ளால் வெற்­றி­பெற்று 3 ஆட்­டங்­க­ளைக் கொண்ட தொட­ரில் 2:0 என்ற அடிப்­ப­டை­யில் முன்­னி­லை­யில் உள்­ளது தென்­னா­பி­ரிக்க அணி.

பாகிஸ்­தான் அணி தென்­னா­பி­ரிக்­கா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டம் கடந்த 3ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற தென்­னா­பி­ரிக்க அணி முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்­தான் அணி 177 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக அக­மட் 56 ஓட்­டங்­க­ளை­யும், மசூட் 44 ஓட்­டங்­க­ளை­யும், அமீர் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 22 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஒலி­வர் 4 இலக்­கு­க­ளை­யும், ஸ்ரெய்ன் 3 இலக்­கு­க­ளை­யும், ரபாடா 2 இலக்­கு­க­ளை­யும், பிளன்­டர் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.
பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய தென்­னா­பி­ரிக்க அணி 431 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

அணித் தலை­வர் டு பிளா­சிஸ் 103 ஓட்­டங்­க­ளை­யும், மார்க்­ரம் 78 ஓட்­டங்­க­ளை­யும், பவுமா 75 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் அமீர், சாஜ் அப்­ரிடி இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­க­ளை­யும், அப்­பாஸ், மசூட் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.
இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கக் கள­மி­றங்­கிய பாகிஸ்­தான் அணி 294 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. சபிக் 88 ஓட்­டங்­க­ளை­யும், அசாம் 72 ஓட்­டங்­க­ளை­யும், மசூட் 61 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் ஸ்ரெய்ன், ரபாடா இரு­வ­ரும் தலா 4 இலக்­கு­க­ளை­யும், பிளன்­டர், ஒலி­வர் இரு­வ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­ற­தால் தென்­னா­பி­ரிக்க அணிக்கு வெறும் 41 ஓட்­டங்­கள் மட்­டுமே இலக்­காக நிர்­ண ­யிக்­கப்­பட்­டது. அந்த அணி ஓர் இலக்கை மட்­டும் இழந்து வெற்­றி­பெற்­றது. முன்­ன­தாக முடி­வ­டைந்த முத­லா­வது ஆட்­டத்­தி­லும் தென்­னா­பி­ரிக்க அணி வெற்­றி­பெற்­றி­ருந்­த­தால் அந்த அணி கிண்­ணம் வெல்­வதை உறுதி செய்­தது. தொட­ரின் மூன்­றா­வ­தும் இறு­தி­யா­ன­து­மான ஆட்­டம் ஜொகன்ஸ்­பேர்க் மைதா­னத்­தில் எதிர்­வ­ரும் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

You might also like