side Add

பார்சிலோனாவிடம் வீழ்ந்தது கடாவ்பி!!

ஸ்பானியக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் பார்சி லோனா அணி கடாவ்பி அணியை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

பார்சிலோனாவை எதிர்த்து கடாவ்பி அணி மோதியது. ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார் மெஸ்ஸி. தொடர்ந்து சுராஸ் 39ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட பார்சிலோனா 2 கோல்களுடன் முன்னிலையில் இருந்தது.

43ஆவது நிமிடத்தில் கடாவ்பி அணியின் வீரர் ஜெமி மார்டா ஒரு கோல் அடிக்க 2:1 என்ற கணக்கில் பார்சிலோனா முன்னிலையில் இருக்க முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் போராடியும் எந்தவொரு கோல்களும் இல்லாமல் முடிவடைந்தது. முடிவில் பார்சிலோனா அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

You might also like