பிக்பாஸ் போட்டியாளராகும் திருநங்கை!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் திருநங்கை ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்கைசமீபத்தில் வெளியிட்டது விஜய் ரிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான விடையை அடுத்தடுத்த நாள்களில் வெளியிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இரண்டாவதாக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் நடிகை மதுமிதா கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. மேலும், 90 எம்.எல் பட நடிகை ஸ்ரீகோபிகா, நடிகை பூனம் பாஜ்வா ஆகியோரிடமும் பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த முறை திருநங்கை ஒருவரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்க தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பாடகி சாக்க்ஷி , தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி , கல்கி என இவர்களில் யாரேனும் பங்குபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பட்டியலில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக இருக்கும் திருநங்கை அப்சரா ரெட்டியின் பெயரும் இணைந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் பங்கேற்கப்போகும் திருநங்கை போட்டியாளர் யார் என்பது குறித்த விவரம் தெரிய வரும்.

You might also like