புத்தகம் எழுதி விருது பெற்ற நான்கு வயதுச் சிறுவன்!!

நான்கு வயதில் புத்தகம் எழுதிய சிறவனுக்கு இந்தியாவின் இளம் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அயன் கோகோய் கொஹன் அசாம் மாநிலம் வட லக்‌ஷ்மிபூரை சேர்ந்தவர். தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் இருந்து வருகிறார். தற்போது ஆரம்பப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். இவர் எழுதிய ‘தேன்கூடு’ எனும் புத்தகம் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் மொத்தம் 30 நிகழ்வுகள் குறித்து எழுதப்பட்டுள்ளன. அதற்கான விளக்கப்படங்களும் அந்தச் சிறுவனால் வரையப்பட்டுள்ளன.

தனது முதல் வயதிலிருந்தே படங்களை வரையத் தொடங்கியதாக புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 வயது பூர்த்தியடைந்த போது. தான் தினமும் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை குறித்து சிறுவன் எழுதத் தொடங்கியுள்ளான். தனது தாத்தா தனக்கு வரையவும் எழுதவும் கற்றுக்கொடுப்பதாகவும் அவர் தான் தனது ‘ஹீரோ’ மற்றும் ‘சாக்லேட் மேன்’ எனவும் அயன் தெரிவித்துள்ளான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close