side Add

போரைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கை வாட்டும் வறுமை!!

ஒஸ்லோ பிரதி முதல்­வர் குண­ரட்­ணம் கம்சி இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். குண­ரட்­ணம் கம்­சி­யின் தாயார் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தை­யும் தந்தை கைத­டி­யை­யும் பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்­கள். இவர் தனது நான்கு வய­தில் நோர்­வேக்­குப் புலம்­பெ­யர்ந்­தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வய­தில் முதன் முத­லாக மாந­கர உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வா­னார். இன்று வரை அந்த மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தொடர்­கின்­றார். 2015ஆம் ஆண்­டு­மு­தல் ஒஸ்லோ பிரதி முதல்­வ­ரா­க­வும் செயற்­பட்டு வரு­கின்­றார். இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர் அண்­மை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­தார். தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளார். அவ­ரு­ட­னான செவ்வி.

கேள்வி: – இலங்­கை­யின் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தில் பிறந்து நோர்வே நாட்­டில் தஞ்­ச­ம­டைந்த நிலை­யில், இளம் வய­தில் பிரதி முதல்­வ­ராக வந்­தமை தொடர்­பில் என்ன நினைக்­கின்­றீர்­கள்?

பதில்: – சமூ­கம் அமைத்த கட்­ட­மைப்பை சமூ­கத்­தால் மாற்ற முடி­யும். பெண்­க­ளால் முயன்­றால் முடி­யா­தது என எது­வுமே இல்லை. அந்த நிலை­யில் நோர்வே நாட்­டில் நான் செய்த முயற்சி மட்­டு­மல்ல அந்த நாட்­டின் அமைப்பு முறை­க­ளும் இதற்கு வழி­ச­மைத்­தன. இத­னால்­தான் 19 வய­தில் ஒஸ்லோ மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தேர்­வா­கி­னேன். அதைத் தொடர்ந்து தற்­போது பிரதி முதல்­வ­ரா­னேன்.

ஈழத்­துப் பெண்­க­ளுக்­காக
குரல் கொடுக்க வேண்­டும்

கேள்வி: – தங்­கள் பய­ணத்­தின்
முக்­கிய நோக்­கம் என்ன?

பதில்: – குரல்­க­ளுக்­குக் குரல் கொடுப்­பதே எனது பய­ணத்­தின் முக்­கிய நோக்­கம். இங்­குள்ள பெண்­கள் தமக்­கான குரலை தாங்­களே உயர்த்த வேண்­டும். அதில் எந்த விட­யத்­துக்கு? எவ்­வாறு?, எங்கே?, எப்­போது? என்­ப­தனை மட்­டுமே நாம் வழி­காட்ட வேண்­டும். அதன் பிர­கா­ரம் முத­லில் குரலை உயர்த்தி அவர்­க­ளுக்­கான பாதை­யைத் திறக்க வேண்­டும்.

கேள்வி: – நோர்வே நாட்­டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு எவ்­வாறு உள்­ளது.?

பதில்: – ஒஸ்லோ மாந­கர சபை­யில் 40 வீத­மா­னோர் பெண்­கள். நேர்­வே­யின் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­க­ளில் ஆண்­கள் 50 வீத­மும் பெண்­கள் 50 வீத­மும் இருத்­தல் வேண்­டும். அதி­லும் இளை­யோ­ருக்கே சகல கட்­சி­க­ளும் முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றன. இதன் கார­ண­மா­கவே முதன் முத­லாக 2007ஆம் ஆண்டு தேர்­வாகி இன்று 30 வய­து­வரை ஒஸ்லா மாந­க­ரின் உறுப்­பி­ன­ராக அங்­கம் வகிக்­கின்­றேன்.

கேள்வி: – இலங்­கை­யில் அதி­லும் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வாழும் பெண்­க­ளுக்­கும் நோர்­வே­யில் வசிக்­கும் பெண்­க­ளுக்­கும் உள்ள வசதி வாய்ப்­புக்­கள் நிறை­யவே வேறு­ப­டும் நிலை­யில் எமது நாட்­டுப் பெண்­க­ளின் திற­மை­களை வெளிக்­கொ­ணர என்ன நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள முடி­யும் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: நோர்வே ஓர் அழ­கான நாடு­தான் அதில் சந்­தே­கம் இல்லை. ஆனால் நோர்­வே­யில் வறுமை இல்லை எனக் கூறி­விட முடி­யாது. ஆனால் வறு­மையை நோர்வே திறம்­ப­டக் கையா­ளு­கின்­றது. இங்­குள்ள பெண்­கள் சாதிப்­ப­தற்கு பெரும் தடை வறு­மையே.

கேள்வி: – வடக்கு – கிழக்­கில் தற்­போது போருக்­குப் பின்­னர் உள்ள சூழ­லில் பெண்­கள் எதிர்­நோக்­கும் பல சவால்­கள், பிரச்­சி­னை­களை அறிந்­தி­ருப்­பீர்­கள். அந்த பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன கார­ணம் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: – தற்­போது வடக்கு கிழக்­கில் போருக்­குப் பின்­னர் உள்ள முக்­கிய பிரச்­சினை வறுமை. இந்த வறு­மையை இல்­லாது செய்ய உரிய வழி­வ­கை­க­ளைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும். இல்­லா­து­வி­டில் இது உருப்­பெற்று குற்­ற­மா­ கக்­கூ­டிய வாய்ப்­பைப் பெறும்.

கேள்வி: – இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக அனைத்­தும் சிதை­வ­டைந்த நிலை­யில் தமிழ் மக்­கள் அதிக நெருக்­க­டி­யை­யும் குறிப்­பாக பெண்­கள் அதிக அழுத்­தத்­தை­யும் எதிர்­நோக்­கும் நிலை­யில் இவர்­க­ளுக்கு என்ன செய்ய முடி­யும் என எதிர்­பார்க்­கின்­றீர்­கள்? என்ன உதவி செய்ய எண்­ணு­கின்­றீர்­கள் ?

பதில்: -உட­ன­டி­யாக என்­னால் எது­வும் செய்ய முடி­யாது. அதே­நே­ரம் இங்­குள்ள பெண்­க­ளின் மனோ­தி­டத்­தி­லும் சந்­தே­கம் கிடை­யாது. ஏனெ­னில் போரில் ஆண்­க­ளுக்கு நிக­ராக ஆயு­தம் தூக்­கிப் போர் புரிந்த பெண்­கள் இவர்­கள். அத­னால் எத­னை­யும் சாதிக்­கும் மனோ­ப­லம் உண்டு. இவை அனைத்­தை­யும் செய்து சாதித்த பெண்­க­ளின் தற்­போ­தைய அர­சி­யல் பலம்­போ­தாது. அதா­வது தனியே பங்­க­ளிப்பு அன்றி தலை­மைத்­து­வத்­திற்­கும் வர­வேண்­டும். அதற்கு உட­ன­டி­யா­கவே எனது அனு­ப­வப் பகிர்­வை­யும் வழி­காட்­ட­லை­யும் வழங்க முடி­யும்.

இலங்­கைப் பெண்­க­ளும்
நோர்­வேப் பெண்­க­ளும்

கேள்வி: பெண்­கள் குறித்­தான அணு­கு­முறை இலங்­கை­யி­லும் நோர்­வே­யி­லும் வேறு­ப­டு­கின்­ற­னவா?

பதில்: – நிச்­ச­ய­மாக வேறு­ப­டு­கின்­றன. நோர்­வே­யில் இளை­யோர் என்றே பார்ப்­பார்­கள். ஆனால் இங்கு ஆண்­கள், பெண்­கள் எனப் பார்க்­கின்­ற­னர். இலங்­கை­யில் ஒரு குழந்தை பிறந்­தால் அதனை வளர்ப்­பது முதல் கல்வி, உணவு வரை­யில் தாயின் கடமை என்றே பாரப்­ப­டுத்­தப்­பட்­டும். ஆனால் நோர்­வே­யில் அவ்­வாறு கிடை­யாது. அதற்கு அந்த நாட்­டின் சட்­ட­மும் இட­ம­ளிக்­காது. உதா­ர­ண­மாக ஒரு பெண் குழந்­தை­யைப் பிர­ச­வித்­தால் பெண்­ணுக்கு 7 மாத விடு­முறை உண்டு. அதன் பின்பு ஆணுக்கு 4 மாத விடு­முறை உண்டு. அதா­வது இது­தான் சம உரி­மை­யா­க­வும் இருக்­கும். ஆணுக்கு உள்ள உரி­மையை பெண்­ணுக்கு வழங்க வேண்­டும். அதே­போல் பெண்­ணுக்கு உள்ள உரி­மையை ஆணுக்­கும் வழங்க வேண்­டும். அத­னால் அங்கே சமத்­து­வம் அதி­க­மா­கக் காணப்­ப­டும்.

கேள்வி -: எமது பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்தி மற்­றும் பெண்­க­ளின் அபி­வி­ருத்­திக்கு உங்­கள் அனு­ப­வப் பகிர்வு மூலம் எதனை மேற்­கொள்ள வேண்­டும் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: – அர­சி­யல் முதல் உள்­ளூ­ராட்சி வரை­யில் இளை­யோர் மற்­றும் பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். அதே நேரம் மக்­க­ளுக்­கும் ஆளும் அர­சுக்­கு­மான நெருக்­கம் மிகக் குறு­கி­ய­தாக இருத்­தல் வேண்­டும். மக்­க­ளால் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­கள் உட­னுக்­கு­டன் செவி சாய்க்­கப்­பட வேண்­டும். இவை நோர்­வே­யில் அதி­க­மாக உள்­ளன என என்­னால் திட­மா­கக் கூற முடி­யும். இவை அனைத்­தும் இலங்­கை­யில் இருக்­கின்­றதா?

You might also like