side Add

போலி நாண­யத் தாள்­களை கைமாற்ற முற்­பட்­டவர்களுக்கு மறியல்!!

5 ஆயி­ரம் ரூபா போலி நாண­யத் தாள்­களை கைமாற்ற முற்­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இரண்டு இளை­ஞர்­கள் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். கைத­டிச் சந்­தி­யில் வைத்து நேற்று அதி­காலை அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

போலி ஐயா­யி­ரம் ரூபா நாண­யத்­தாள்­களை யாழ்ப்­பா­ணப் பகு­தி­யில் விநி­யோ­கிப்­ப­தற்கு ஒப்­பந்­தம் பேசப்­ப­டு­வ­தாக மாவட்டக் குற்­றப் பு­ல­னாய்வுப் பொறுப்­ப­தி­காரி உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் ஜே.ஜெய­றோ­ச­னுக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய சாவ­கச்­சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­த­கர் இ.சேந்­தன் தலை­மை­யி­லான குழு­வி­னர் துரி­த­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து குறித்த போலி நாண­யத்­தாள் விநி­யோ­ கஸ்­தர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைளை முன்­னெ­டுத்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் திரு­கோ­ ண­மலை பேருந்­தில் யாழ்ப்­பா­ணம் நோக்கி வந்த போலி நாண­யத்­தாள் விநி­யோ­கஸ்தர்­கள் இரு­வ­ரும் கொடி­கா­மம் பகு­தி­யில் இறங்கி டிப்­பர் வாக­னம் ஒன்­றில் ஏறி கைத­டிப் பகு­திக்கு சென்று நாண­யத்­தாள்­களை கைமாற்ற முற்­பட்­ட­ போது சாவ­கச்­சேரி பொலி­ஸார் இரண்டு சந்­தேக நபர்­க­ளை­யும் கைது­செய்­துள்­ள­னர்.

சந்­தே­க­ந­பர்­க­ளி­டம் இருந்து 20 போலி ஐயா­யி­ரம் ரூபா நாண­யத்­தாள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. குறித்த சந்­தேக நபர்­கள் தொடர்ச்­சி­யாக ஒரு லட்­சம் போலி நாண­யத்­தாள்­களை முப்­ப­தா­யி­ரம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­துள்­ளமை விசா­ர­ணை ­க­ளின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது என்று உப பொலிஸ் பரி­சோ­த­கர் இ.சேந்­தன் தெரி­வித்­தார்.

கைது செய்­யப்­பட்ட இரு­வ­ரும் 25, 26 வய­து­க­ளை­யு­டைய தமிழ், முஸ்­லிம் இளை­ஞர்­கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி ( 24.01.) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

You might also like