மட்டக்களப்பு பல்கலைக் கழகத்துக்கு -அத்துரலிய ரத்ன தேரர் விஜயம்!!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு இன்று நேரடியாகச் சென்றிருந்தார்.

“குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும். வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது எங்களுக்கு தெரியும். எனவே மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றப்பட வேண்டும் அதற்காக யோசனை, சட்ட வரைவு அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும்“ என்று ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

You might also like