மது அருந்தியதால் வந்த வினை- மூவருக்கு தூக்குத் தண்டனை!!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2001 ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, விகும் கலுஆரச்சி முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close