மாதோட்­டம் எப்.சி அசத்­தல் வெற்றி

வடக்கு – கிழக்கு பிறீ­மி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் மாதோட்ட எவ்.சி. அணி இமா­ லய வெற்­றி­பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் மாதோட்ட எவ்.சி. அணியை எதிர்த்து அம்­பாறை அவேஞ் சர்ஸ் அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் முதல் பாதி­யில் 4:0 என்ற கோல் கணக்­கில் முன்­னிலை வகித் தது மாதோட்ட எவ்.சி. அணி. 7ஆவது நிமி­டத்­தில் சதீஸ்­கு­மார், 28ஆவது நிமி­டத்­தில் ஜோன்­சன், 40ஆவது நிமி­டத்­தில் டெசில்­டேவ், 45ஆவது நிமி­டத்­தில் திலீ­பன் ஆகி­யோர் அந்­தக் கோல்­க­ளைப் பதி­வு­செய்­த­னர்.

இரண்­டா­வது பாதி­யி­லும் மாதோட்ட எவ்.சி. அணி­யின் அதி­ர­டி­யான ஆட்­டம் தொடர்ந்­தது.

ஐந்­தா­வது, ஆறா­வது, ஏழா­வது கோல்­களை 52ஆவது, 66ஆவது, 77ஆவது நிமி­டங்­க­ளில் யோண்­சன் பதி­வு­செய்­தார். 85ஆவது நிமி­டத்­தில் கரன் மற்­றொரு கோலைப் பதி­வு­செய்ய முடி­வில் 8:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது மாதோட்ட எப்.சி. அணி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close