மிளகாய் தூள் தூவி கழுத்தறுக்கப்பட்ட நபர்- திகில் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார்!!

இனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் முகத்துக்கு மிளகாய் தூள் வீசி, பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் நடந்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வெஹரயாய, எதிலிவெவப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரது சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மிளகாய் தூள் தூவி,குறித்த நபரை கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களை தேடி வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close