யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு உணவகங்களுக்குப் பூட்டு

யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பிரதான உணவகங்கள் இரண்டு இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பொதுச்சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக அவை தற்காலிகமாக மூடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உணவகங்களும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் நேரடியாகச் சென்று உணவகங்களைப் பார்வையிட்டனர். உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.

இரண்டு உணவகங்களுக்கு எதிராக சுகாதாரப் பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் இரண்டு உணவகங்களையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடவேண்டும் என்று நீதிமன்றால் அறிவித்தல் வழங்கப்பட்டது.

You might also like