வடக்கு, கிழக்கை இணைக்கும் -கொக்கிளாய் பாலம்!!

1 325

வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீற்றர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like