side Add

வர­லாறு படைத்­தது இந்­தியா!!

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான நான்­கா­வது டெஸ்ட் ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­ததை அடுத்து 2:1 என்ற அடிப்­ப­டை­யில் கிண்­ணம் வென்று வர­லாறு படைத்­தது இந்­திய அணி.

இந்­திய அணி இது­வரை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் வைத்து டெஸ்ட் தொட­ரெ­தை­யும் வென்­ற­தில்லை. ஆனால் இம்­முறை சுற்­றுப் பய­ணத்­தின்­போது இது சாத்­தி­யம் என்று பல­ரும் கரு­தி­னார்­கள். மூன்று ஆட்­டங்­கள் முடி­வ­டைந்­தி­ருந்த நிலை­யில் அவற்­றில் இரண்­டில் இந்­திய அணி வெற்­றி­பெற்று கிண்­ணத்தை இழக்­கும் நிலையை ஏற்­க­னவே தவிர்த்­தி­ருந்­தது. நான்­கா­வது ஆட்­டம் சிட்­னி­யில் கடந்த 3ஆம் திகதி ஆரம்­ப­மா­னது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற ஆஸ்­தி­ரே­லிய அணி 7 இலக்­கு­களை இழந்து 622 ஓட்­டங்­க­ளைக் குவித்­தி­ருந்­த­போது ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது. அதி­க­பட்­ச­மாக புஜாரா 193 ஓட்­டங்­க­ளை­யும், பன்ட் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 159 ஓட்­டங்­க­ளை­யும், ஜடேயா 81 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் லயன் 4 இலக்­கு­க­ளை­யும், ஹசில்­வூட் 2 இலக்­கு­க­ளை­யும், ஸ்ராக் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய ஆஸ்­தி­ரே­லிய அணி 300 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக ஹரிஸ் 79 ஓட்­டங்­க­ளை­யும், டபுஸ்­பேஞ் 38 ஓட்­டங்­க­ளை­யும், ஹான்ட்ஸ்­கொம் 37 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் குல்­தீப் யாதவ் 5 இலக்­கு­க­ளை­யும், சமி, ஜடேயா இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும், பும்ரா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

ஆஸ்திரேலியா அணி ‘பொலோ ஒன்’ முறை­யில் இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கத் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தா­டப் பணிக்­கப்­பட்­டது. நேற்­று­முன்­தின நாள் முடி­வில் அந்த அணி இலக்­குச் சரி­வில்­லா­மல் 6 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­தது. கவாயா 4 ஓட்­டங்­க­ளு­ட­னும், ஹரிஸ் 2 ஓட்­டங்­க­ளு­ட­னும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­த­னர். மழை நேற்­றுக் குறுக்­கிட்ட நிலை­யில் மேல­தி­க­மாக ஒரு பந்­து­கூட வீசப்­ப­டாத நிலை­யில் ஆட்­டம் சம­நி­லை­யா­னது. தொடர் இந்­தி­யா­வி­டம் சென்­றது.

You might also like