விடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரம்- தீர்ப்பாயம் அமைத்தது இந்தியா!!

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் , இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்தத் தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. அண்மையில் இந்தத் தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

இதற்காக டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like