ஹரியின் திருமணத்துக்குச் செல்ல அடம்பிடிக்கும் சிறுமி- வைரலான வீடியோ!!

இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு தானும் போக வேண்டும் என ஐந்து வயது சிறுமி அழுகின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த வாரம் இங்கிலாந்து இளவரசர் ஹரி – மெகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை இங்கிலாந்தே திருவிழாவாகக் கொண்டாடிய போதும், அதிகாரப்பூர்வமாக திருமணத்திற்கு 600 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்புவிடப் பட்டிருந்தது.

ஆனபோதும், புதுமணத் தம்பதிகளைப் பார்ப்பதற்காகவே அவர்களது திருமண ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர்.

ராஜ குடும்பத்தில் நடந்த இந்தத் திருமணத்தை நேரில் பார்க்க இயலவில்லையே என்ற ஏக்கம் அந்நாட்டு மக்கள் பலருக்கும் உள்ளது. இந்நிலையில், தன்னை ஏன் இளவரசர் ஹரி அவரது திருமணத்திற்கு அழைக்கவில்லை என லோலா என்ற ஐந்து வயது சிறுமி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், சிறுமி லோலா, ‘நானும் ஹாரி திருமணத்திற்கு செல்ல வேண்டும்’ எனக் கேட்கிறாள். அதற்கு அவரது தாய், ‘நாமெல்லாம் அந்தத் திருமணத்திற்கு போக இயலாது. நமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ எனப் பதிலளிக்கிறார். இதனைக் கேட்ட லோரா கதறி அழுகிறார்.

You might also like