2019- இல் மாணவர்களுக்கு – சீருடை துணிகள் விநியோகிக்க அனுமதி!!

2019 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கான துணியை வழங்கும் பொருட்டு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலவச கல்வியைப் பெறும் மாணவர்களின் கல்வியில் சம நிலையை உறுதி செய்வதற்காக சுமார் 45 இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான துணியை வழங்குவதற்கு 1993 ஆம் ஆண்டில் இருந்து இது வரையிலான 25 வருடகாலமாக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சமீபகாலம் முதல் கடைப்பிடிக்கப்பட்ட ‘திலினபத்’ என்ற நடைமுறைக்கு அமைவாக உள்ளுர் ஆடை தயாரிப்பாளர்களிடம் பாடசாலை சீருடை துணியை பெற்றுக் கொண்டு முன்னர் இருந்த வகையில் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக நன்மை உள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையின் கீழ் 1 மீற்றர் துணிக்காக சுமார் 50 ரூபாயை சேமிக்க முடியும் என்பதினாலும் உள்ளுர் தயாரிப்பாளர்களிடம் இருந்து துணியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டு செலவினத்தையும் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You might also like