4:1 என்ற அடிப்­ப­டை­யில் குக்கை வழி­ய­னுப்­பு­வோம்

ரூட் நம்­பிக்கை

இந்­தி­யா­வுக்கு எதி­ராக நேற்று ஆரம்­ப­மான டெஸ்ட் ஆட்­டத்­தில் வெற்­றி­பெ­றும் நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்­தி­னார் இங்­கி­லாந்து அணி­யின் தலை­வர் ஜோ ரூட்.

இந்த ஆட்­டத்­து­டன் முன்­னணி வீர­ரான அலிஸ்­டர் குக் பன்­னாட்டு அரங்­கில் இருந்து விடை­பெற்­றுச் செல்­லும் நிலை­யில், அவரை வெற்­றி­யு­டன் அனுப்­பும் நம்­பிக்­கை­யை­யும் அவர் வெளிப்­ப­டுத்­தி­னார்.

‘‘இந்த வாரம் எங்­க­ளுக்கு மிக­வும் உணர்ச்­சி­க­ர­மான வார­மாக அமைந்­துள்­ளது. இங்­கி­லாந்து அணி சார்­பாக நிறைய ஆட்­டங்­க­ளில் விளை­யா­டிய வீரர் ஓய்வு பெறு­வது எங்­க­ளுக்கு பெரிய இழப்­பா­கும்.

ஓய்­வு­பெ­றும் அலிஸ்­டர் குக்கை 4:1 என்ற அடிப்­ப­டை­யில் வழி­ய­னுப்ப முடிவு செய்­துள்­ளோம். அதையே இலக்­கா­கக் கொண்டு விளை­யா­டு­வோம்’’ என்று ரூட் மேலும் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close