இங்­கி­லாந்­தில் பொறு­மையே மிக அவ­சி­யம்

0 2

‘‘இங்­கி­லாந்து ஆடு­க­ளங்­க­ளில் சாதிப்­ப­தற்கு பொறுமை மிக­மிக அவ­சி­ய­மா­னது’’ என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் நட்­சத்­திர வீரர் ரகானே.

இங்­கி­லாந்து, இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான இறுதி டெஸ்ட் ஆட்­டம் நேற்று ஆரம்­ப­மா­கி­யது. இந்த ஆட்­டத்­துக்கு முன்­ன­தா­கக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் ரகானே. இங்­கி­லாந்து மண்­ணில் விளை­யா­டும் போது துடுப்­பாட்­டத்­தில் என்­றா­லும் சரி, பந்­து­வீச்­சில் என்­றா­லும் சரி பொறுமை மிக­வும் முக்­கி­ய­மா­கும்.

துடுப்­பாட்­டத்தை எடுத்­துக் கொண்­டால், பந்தை அடிக்­கா­மல் வெளியே விடும் உக்­தியை நீண்ட நேரம் கடைப்­பி­டிக்க வேண்­டும். அப்­போ­து­தான் தாக்­குப்­பி­டிக்க முடி­யும். எங்­க­ளது பந்து வீச்­சா­ளர்­கள் அபா­ர­மா­கப் பந்­து­வீ­சிய நிலை­யில், துடுப்­பாட்ட வீரர்­கள் ஒரு குழு­வாக அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு கொடுக்­கா­த­து­தான் வருத்­தம் அளிக்­கி­றது.

தொடரை உயர்ந்த நிலை­யில் நிறைவு செய்ய வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றோம். 3:2 என்ற கணக்­கில் முடித்­தால் உண்­மை­யி­லேயே அது சிறப்­பாக இருக்­கும்’’ என்று ரகானே மேலும் தெரி­வித்­தார்.

You might also like