side Add

காணிகளுக்கான ஆவணம் அடுத்தவருடம்

வடக்கு மாகாணத்தில்  காணி சீர்திருத்த ஆணைக்குழு வழங்கிய காணிகளுக்கான உரிமப் பத்திரங்கள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணப் பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

வடக்கு மாகாணத்தில்  காணி இல்லாத பொதுமக்களின் நன்மைகருதி அரச காணிகள்  வழங்கப்பட்டுள்ளன. காணி சீர் திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான  காணிகள்  குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கால் ஏக்கர் தொடக்கம் 2 ஏக்கர் வரை வழங்கப்பட்டுள்ளன. முன்னர் வழங்கப்பட்ட  காணிகள், ஆணைக்குழு மீள உருவாக்கப்பட்ட  பின்னர் அளவீடு செய்யப்பட்டுள்ளன. அதன்பின்னர் தற்காலிக உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டுத்திட்டம், மலசலகூடம் அமைத்தல் போன்ற உதவித்திட்டங்கள் கிடைக்க வேண்டும். ஆகவே தற்காலிகமாக இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. காணி  பயன்பாட்டு நிதியாக  வருடம் ஒன்றுக்கு  ஒரு ஏக்கருக்கு 630 ரூபா வீதம்  காணி வழங்கப்பட்ட  நாளில் இருந்து உரிமையாளர் செலுத்த வேண்டும். அந்த  நிதி தற்போது உரிமையாளர்களால் செலுத்தப்பட்டு வருகிறது. கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களிலேயே அதிமாகக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டின்  நடுப்பகுதிக்குள்  சுமார் 3 ஆயிரத்து  500 பேருக்குக் காணி உரிமப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. அதற்கான  வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணி பயன்பாட்டு நிதி செலுத்தாதவர்களுக்கு அது பற்றிக்  கடிதங்கள்  மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like