side Add

குடாநாட் ­டில் -வாழைப்பழத்தின் -விலை அதிகரிப்பு!!

யாழ்ப்­பா­ணக் குடாநாட் ­டில் வாழைப்­ப­ழத்­தின் விலை கடந்த மாதத்தை விடத் தற்­போது சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மாதத்­தில் இதன் விலை­யில் வீழ்ச்சி ஏற்­பட்­டது.

தற்­போ­தைய கால­நிலை மற்­றும் காற்­றின் கடு­மை­யான தாக்­கத்­தால் அனே­க­மான வாழை­கள் ஒரு­வித நோய்க்கு இலக்­கா­கி­யும் உள்­ளன.

அத­னை­விட ஆல­யங்­க­ளில் மகோற்­ச­வங்­கள் ஆரம்­ப­மாகி நடை­பெற்று வரு­வ­தா­க­வும் வாழைப்­ப­ழத்­தின் பயன்­பா­டும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்த நிலை­யில்­தான் வாழைப்­ப­ழத்­தின் விலை­யும் சடு­தி­யாக அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­வ­தாக வாழைச் செய்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

குறிப்­பாக வாழைக்­குலை விற்­ப­னைக்குப் பெயர்­போன இட­மான நீர்­வேலி வாழைக்­குலை விற்­பனைச் சந்­தை­யில்­கூடப் போதி­ய­ளவு வாழைக்­கு­லை­கள் வந்து சேரா­த­தால் அவற்றின் விற்­பனை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது.

You might also like
X