side Add

பிரேரணை கொண்டு வந்தவருக்கு -புலனாய்வுப் பிரிவால் அச்சுறுத்தல்!!

நல்­லூர்ப் பிர­தேச சபைக்­குட்­பட்ட பாற்­பண்­ணைப் பகு­தி­யில் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள காணியை மீட்க வேண்­டும் என்று பிரே­ரணை கொண்­டு­வந்த பிர­தேச சபை உறுப்­பி­னர் சிவலோ­க­நா­த­னுக்கு இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் அச்­சு­று­த்தல் விடுத்­த­மைக்கு கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட் ­டது.

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் சபை­யின் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. அதில் சபை உறுப்­பி­னர் மது­சு­தன் இந்த விட­யத்தைச் சபை­யின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்­தார்.

சபை­யின் கடந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் சிவ­லோ­க­நா­தனை இரா­ணு­வத்­தி­டமுள்ள காணியை மீளப் பெற்று அங்கு அபி­வி­ருத்தி சார்ந்த வேலைத்­திட்­டங்­கள் செய்­யப்­பட வேண்­டும் என்று பிரே­ரணை முன்­மொ­ழிந்­தி­ருந்­தார். சபை நட­வ­டிக்கை முடிந்து வீடு சென்ற அவரை அலை­ பே­சி­யில் தொடர்பு கொண்ட சிலர் தம்­மைப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் என்று அறி­மு­கப்­ப­டுத்தி, ‘இந்த விட­யத்தை எதற்­காக சபை­யில் கொண்டு வந்­தாய்? உன்னை யார் இதை செய்ய சொன்னது?’ என அவரை அச்சுறுத்தி யுள்ளனர்.

இந்த நடவடிக்கையைச் சபை மிகவும் கண்டிக்கின் றது. இனிவரும் காலங்க ளில் இவ்வாறான சம்ப வங்கள் நடந்தால் உடனடி யாக சபைக்கு அறிவுறுத்தி நாம் தீர்வு காணவேண் டும். இது சாதாரண விடய மல்ல எனவே இது தொடர்­பில் உறுப்­பி­னர்­கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

அதே­வேளை, கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­னர் திரு­நெல்­வேலி ஆல­யம் ஒன்­றில் தமி­ழீழ வரை­ப­டத்­து­டன் அம்மன் வீதி உலா வந்தமை தொடர்பாக அந்த ஆலயத்தின் செயலராக இருந்த சிவலோகநாத னைப் புலனாய்வுப் பிரி வினர் நேரடியாகவும், அலைபேசி ஊடாகவும் விசாரணை செய்திருந்த னர் என்று தெரிவிக்கப்படு கின்றது.

You might also like
X