side Add

விஜயகலாவின் கூற்றுக்கான -காரணத்தை அரசு -இனியாவது கண்டறியுமா?

கடந்த காலங்­க­ளி­லும் விடு­த­லைப் புலி­களை மீண்­டும் கொண்டு வரு­வ­தற்­குப் பல அர­சி­யல்­வா­தி­கள் முயற்­சித்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் தற்­போது ஆறு­அடி நிலத்­திற்­குள் முடங்­கிக் கிடக்­கின்­ற­னர்.

இதுவே விஜ­க­லா­வுக்­கும் நடக்­கு­மென முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போது அமைச்­சர் பொறுப்­பில் உள்­ள­வ­ரு­மான சரத் பொன்­சேகா கூறி­யுள்­ளதை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது.

இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்­த­வர் சரத்­பொன்­சேகா. அந்­தப்­போ­ரில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொன்று குவிக்­கப் பட்­ட­போது அதை­யெல்­லாம் கண்­டு­கொள்­ளாத அவர், போர் வெற்­றிக்கு உரிமை கொண்­டா­டி­னார்.

இதுவே அவர் சிறை­வா­சம் அனு­ப­விப்­ப­தற்­குக் கார­ண­மா­னது. ஆட்­சி­மா­றி­ய­தால் வௌியில் இருக்­கும் அவர், மகிந்த தரப்பு ஆட்­சிக்கு வந்­தால் தமக்கு என்ன நடக்­குமோ என்ற அச்­ச­வு­ணர்­வு­ட­னேயே காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார். இத் தகைய ஒரு­வர்­தான் ஆறடி நிலம் தொடர்­பா­கப் பேசி­யி­ருக்­கி­றார்.

தெற்­கில் தமக்கு எதி­ரா­கக் கிளம்­பிய எதிர்ப்­பைக் கண்ட இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா தமது பத­வி­யைத் துறந்­து­விட்­டார். ஆனா­லும் இது போதா­தெ­ன­வும் அவ­ருக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­ன­வும் தெற்­கில் உள்ள இன­வா­தி­கள் கூக்­கு­ரல் இடு­கின்­ற­னர்.

அரசியல் யதார்த்த நிலை குறித்து
தென்பகுதி மக்களும்
அரசியல்வாதிகளும் சிந்திப்பதில்லை
விஜ­ய­கலா என்ன கார­ணத்­துக்­கா­கப் புலி­கள் தொடர்­பா­கப் பேசி­னார் என்­பது தொடர்­பா­கத் தெற்­கில் எவ­ருமே சிந்­திப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர் வட­ப­கு­தி­யின் இயல்பு நிலை­யைக் குலைப்­ப­தற்­கான பல நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

குறிப்­பாக இளை­ஞர்­க­ளைத் தவ­றான பாதைக்கு இட்­டுச் செல்­வ­தில் அதிக அக்­கறை காட்­டப்­பட்­டது. பாட­சாலை மாண­வர்­க­ளுக்­குப் போதைப் பொருளை வழங்­கு­வ­தில் தீய சக்­தி­கள் முனைப்­புக் காட்­டின. வாள்­வெட்­டுக் குழுக்­களை அமைக்­கின்ற செயற்­பா­டு­க­ளும் இடம்­பெற்­றன. இதில் கணி­ச­மான வெற்­றி­யும் கிடைத்­தது.

வட­ப­கு­தி­யில் இடம்­பெ­று­கின்ற கொலை, கொள்ளை, பெண்­கள் மீதான வன்­செ­யல்­கள் ஆகி­யவை எல்­லை­மீ­றிச் சென்­ற­போ­தி­லும் தற்­போது விஜ­ய­கலா விட­யத்­தில் கொந்­த­ளிப்­ப­வர்­க­ளின் கண்­க­ளுக்கு அவை தெரி­ய­வில்லை. இவற்­றைத் தடுப்­ப­தற்­கான வழி­வ­கை­கள் தொடர்­பா­க­வும் இவர்­கள் சிந்­திக்­க­வில்லை. வட­ப­கு­தி­யின் இழி­நிலை கண்டு பொறுக்க முடி­யா­மல்­தான் விஜ­ய­கலா தனது உள்­ளக்­கு­மு­றலை வௌியிட்­டார் என்­ப­தைப் புரிந்து கொள்­ளா­த­வர்­கள் புலி­க­ளின் பெய­ரைக் கேட்­ட­வு­டன் பத­றி­ய­டிக்­கின்­ற­னர்.

விடு­த­லைப் புலி­க­ளின் உரு­வாக்கம் குறித்த கருத்து வெளிப்பாட்டுக்கு மாறி மாறி ஆட்­சிக்கு வந்த இன­வாத அர­சு­களே கார­ண­மென்­பதை எவ­ருமே மறுக்க முடி­யாது. தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­த­மேந்­திப் போரா­டு­வ­தற்­கும் இவர்­களே வழி­வ­குத்­த­னர். இனக் கல­வ­ரங்­கள் இடம்­பெ­றும்­போ­தெல்­லாம் அதில் ஈடு­பட்ட குண்­டர்­க­ளுக்கு அர­சின் ஆசிர்­வா­த­மும் நிறை­யவே கிடைத்து வந்­தது. குண்­டர்­கள் அர­சி­னால் ஊக்­கு­விக்­கப்­பட்­ட­தால் அவர்­கள் தமது மனம்­போ­லச் செயற்­பட்டு தமி­ழர்­களை அழிப்­ப­தில் தங்­கு­த­டை­யின்­றிச் செயற்­பட்­ட­னர்.

போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள்
நிறைவுற்றும் தமிழர்களது
பிரச்சினைக்குத் தீர்வில்லை
கொடிய இறு­திப்­போர் ஓய்ந்து அடுத்த மே மாதத்­து­டன் 10ஆண்­டு­கள் பூர்த்­தி­ய­டை­ய­வுள்­ளன. ஆனால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரை தீர்வு கிடைக்­க­வில்லை. தற்­போ­தைய அரசு இதில் சிறி­த­ள­வு­கூட அக்­கறை காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இன­வா­தி­க­ளுக்கு அஞ்சி நடக்­கவே அது முயல்­கின்­றது. இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளின் மனங்­க­ளில் மாறு­பட்ட கருத்­துக்­கள் உதிப்­ப­தில் தவறு என்­ன­வென்­பது புரி­ய­வில்லை.

புலி­கள் சட்­டத்­தை­யும், ஒழுங்­கை­யும் எவ்­வாறு பாது­காத்­தார்­க­ளென்­பதை முழு­நா­டும் அறி­யும். தப்­பித்­த­வ­றிக் குற்­றச்­செ­யல்­கள் இடம்­பெற்­றால் அவை தொடர்­பான விசா­ர­ணை­கள் துரி­த­மாக இடம்­பெற்று குற்­ற­வா­ளி­க­ளுக்கு உட­னுக்­கு­டன் தண்­டனை வழங்­கப்­பட்­டது. இத­னால் எவ­ரும் குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தற்கு அஞ்­சிய காலம் அன்று காணப்­பட்­டது. ஆனால் இன்று என்ன நடக்­கின்­றது? பொலி­சா­ருக்கு அஞ்­சாத நிலை­யில் குற்­ற­வா­ளி­கள் சுதந்­தி­ர­மா­கச் செயல்­ப­டு­கின்­ற­னர். இதற்கு என்ன கார­ணம் என்­பது புரி­ய­வில்லை. அர­சும் இது தொடர்­பாக அலட்­டிக் கொள்­வ­தில்லை.

இராஜாங்க அமைச்சர் பதவியைத் துறந்தவுடன்
பிரச்சினை தீர இனவாதிகள் அனுமதிக்கப் போவதில்லை
விஜ­ய­கலா பதவி துறந்­த­வு­டன் பிரச்­சினை தீர்ந்­த­தா­கக் கூற­மு­டி­யாது. புலி­க­ளின் உரு­வாக்­கத்­துக்கு அவர் கூறிய கார­ணங்­கள் அப்­ப­டி­யே­தான் உள்­ளன. அரசு இவற்­றைக் கண்­ட­றிந்து அவற்­றுக்­கான தீர்­வைக் கண்­ட­றி­வது அவ­சி­ய­மா­ன­தா­கும். இதில் இனி­யும் காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­ப­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பின்­வி­ளை­வு­கள் வேண்டத்த காதவையாக இருக்­கப் போகின்­றன.

வடக்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி பல­மா­கக் காலூன்­று­வ­தற்கு வித்­திட்­ட­வர் மறைந்த தி.மகேஸ்­வ­ரன் என்­பது எல்லோருக்கும் தெரிந்த விட­யம். அவ­ரது மறைவுக்குப் பின்­னர் அவ­ரது துணை­வி­ய­ரான விஜ­ய­கலா தமது கண­வன் விட்­டுச் சென்ற பணி­க­ளைத் தொடர்ந்து ஆற்றி வரு­கின்­றார். கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஒரு ஆச­னத்­தைப் பெற்­ற­து­டன் இறு­தி­யாக இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கணி­ச­மான ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

இந்த நிலை­யில் இங்கு விஜ­ய­க­லா­வுக்கு மாற்­றீ­டாக வேறொ­ரு­வ­ரைத் தெரிவு செய்­வது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைக்கு இல­கு­வாக இருக்கப்போவ தில்லை.

வடக்­கில் புலி­களை நினை­வு­கூ­ரு­கின்ற நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­றத்­தான் செய்­கின்­றன. இதைத் தடுப்­ப­தற்கு அர­சி­னால் முடி­ய­வில்லை. ஆனால் விஜ­ய­கலா விட­யத்­தில் மாத்­தி­ரம் அவ­ச­ரம் காட்­டு­வது ஏன் என்­ப­தைப் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை.

You might also like
X