side Add

அரச தலை­வர் தேர்­த­லும் -சிறு­பான்­மை­யின மக்­க­ளும்!!

எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை சிறு­ பான்­மை­யின மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.
கடந்த தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­ககு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அவரை வெற்­றிப் பாதைக்கு இட்­டுச் சென்­ற­வர்­கள் சிறு­பான்­மை­யின மக்­களே என்­பதை எவ­ருமே மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். ஆனால் இம்­முறை அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை.

அடுத்த அரச தலைவர்
தேர்தல் வேட்பாளர்கள் குறித்து
இதுவரை முடிவு இல்லை
மகிந்த அணி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வரே தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவது உறு­தி­யாகி விட்­டது. ஆனால் அந்த வேட்­பா­ளரை எதிர்த்­துப் போட்­டி­யி­டு­வோ­ரின் பெயர் விவ­ரங்­கள் இன்­ன­மும் வெளி­யா­க­வில்லை.

ஐ.தே.கட்சி தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­விட்ட போதி­லும், அதன் வேட்­பா­ளர்­தொ­டர்­பா­கத்­தெ­ரி­ய­வ­ர­வில்லை. ஐ.தே.கவின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க கள­மி­றங்­க­வி­ருப்­ப­தாக ஆரம்­பத்­தில் தெரி­விக்­கப்­பட்ட போதி­லும், தற்­போ­து­வ­ரை­அது உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. சில­வேளை வேறு எவ­ரா­வது களத்­தில் இறங்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யும் உரு­வா­கி­வி­டக்­கூ­டு­மென்­பதையும் ­­­மறுத்­து­ரைக்க முடி­யாது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன இரண்­டா­வது தட­வை­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்பில் கள­மி­றங்­கு­வாரா? என்­ப­தைக் கூற­மு­டி­ய­ வில்லை. அவர் போட்­டி­யிட்­டா­லும் வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு மிகக் குறை­வா­கவே உள்­ளது. ஏனென்­றால், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த பலர் மகிந்த அணி­யு­டன் இணைந்­து­விட்­ட­னர். ஆகவே மகிந்த அணி பல­மான நிலை­யில் காணப்­ப­ டு­கின்­றது.

சில­வேளை சிறி­சே­னா­வும் மகிந்த அணி­யு­டன் இணைந்து கொண்­டா­லும்­கூட அதில் ஆச்­ச­ரி­யப்­பட எது­வும் இருக்­காது. இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், சிறு­பான்­மை­யின மக்­கள் பாது­காப்­பில்­லாத நிலை­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­ற­னர். பெரும்­பான்­மை­யி­னர் இட்­டதே சட்­டம் என்ற நிலை­யில் சிறு­பான்­மை­யி­ன­ரால் எது­வுமே செய்­ய­மு­டி­ய­வில்லை. அவர்­கள் வாய் திறந்து எதை­யா­வது கூறி­னா­லும், அதைப் பெரி­தாக்­கிப் பிரச்­சி­னை­யைக் கிளப்­பு­வதே பெரும்­பான்­மை­யி­ன­ரின் வாடிக்­கை­யாக மாறி­விட்­டது.

சமீப நாள்க­ளாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தொடர்­பான செய்­தி­கள் ஊட­கங்­க­ளில் முக்­கி­யத்­து­வம் பெற்று விளங்­கு­கின்­றன. அவர் பகி­ரங்க மேடை­யொன்­றில் தப்­பித்­த­வ­றிக் கூறிய வார்த்­தை­கள் அவ­ருக்கு வினை­யாக மாறி­விட்­டன. தமி­ழர்­கள் எதைக் கூறினாலுமே துள்­ளிக் குதிக்­கின்ற தென்­ப­குதி இன­வா­தி­கள்,விடு­த­லைப் புலி­க­ளின் நாமத்தை உச்­ச­ரிக்­கும்­போது சும்மா இருப்­பார்­களா? விஜ­ய­கலா மீது கண்­ட­னக் கணை­க­ளைத் தொடுத்து அவரை ஒருகை பார்த்­து­விட்­டார்­கள்.

இதைப் பொறுக்­க­மு­டி­யாத விஜ­ய­கலா தனது அமைச்­சர் பத­வி­யையே துறந்­து­விட்­டார். தற்­போது அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­விக்­கும் வேட்டு வைக்­கின்ற முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதற்­குப் பின்­ன­ரும் அவரை நிம்­ம­தி­யாக இருக்­க­வி­டு­வார்­க­ளென நம்­ப­மு­டி­யாது. சிறு­பான்­மை­யி­ ன­ரின் மதிப்பு இந்த நிலை­யில்தான் இங்கு காணப்­ப­டு­கின்­றது.

அரச தலைவர் தேர்தலில்
இம்முறை தமிழ்மக்கள்
ஆர்வம் காட்ட மாட்டார்கள்
அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை தமிழ் மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது. அவர்­கள் எதிர்­கொண்ட ஏமாற்­றங்­கள் அர­சி­யல்­வா­தி­கள் மீது வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.கடந்த தடவை அவர்­கள் நம்­பிக்­கை­யு­டன் வாக்­க­ளித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­களை முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். தமி­ழர்­க­ளின் வாக்­கு­க­ளால் தாம் பத­விக்கு வந்­த­து­கூட அவ­ரது நினைப்­பில் வரு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அவ்­வாறு வந்­தி­ருந்­தால், இனப்­பி­ரச்­சினை மட்­டு­மல்­லாது தமி­ழர்­க­ளின் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்­குமே தீர்­வைக் கண்­டி­ருப்­பார். ஆகவே தேர்­த­லில் அவர் போட்­டி­யிட்­டால் தமி­ழர்­கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள்.

வழமைபோன்று இம்முறையும்
ஆட்சியாளர்களால் தமிழர்கள்
ஏமாற்றப்பட்டனர்
ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் அர­சொன்றை அமைத்­துக்­கொண்­டது. ஆனால் தமி­ழர்­க­ளுக்கு எதை­யுமே செய்­ய­வில்லை. தலைமை அமைச்­சர் பொறுப்பை வகிக்­கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமி­ழர்­க­ளின் விட­யத்­தில் பாரா­மு­க­மா­கவே நடந்து கொள்­கின்­றார். அண்­மை­யில் கிளி­நொச்­சிக்கு அவர் வந்­த­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது. ஆகவே ரணி­லுக்­கும் தமி­ழர்­க­ளின் வாக்­கு­கள் கிடைக்­கு­மென எதிர்­பார்க்க முடி­யாது.இறு­தி­யாக மகிந்த பக்­கம் பார்­வை­யைத் திருப்­பி­னால் அங்­கும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான சக்­தி­கள் இருப்­ப­தைக் காண­மு­டி­கின்­றது.

விமல்­வீ­ர­ வன்ச, தினேஸ் கு­ண­வர்த்­தன, இடது சாரி­க­ளெ­னத் தம்­மைக் கூறிக் கொள்­ளும் திஸ்ஸ விதா­ரண போன்­ற­வர்­கள் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­க­ளைக் கொண்­ட­வர்­கள். இவர்­கள் மகிந்­த­வுக்கு எப்­போ­துமே தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­கின்­றார்­கள். அதை­விட ஏரா­ள­மான இன­வா­தி­க­ளும் அந்­தப் பக்­கம் உள்­ள­தால், மகிந்த தரப்­பி­லி­ருந்து பத­விக்கு வரு­ப­வர்­கள் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மாக நடந்து கொள்­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது. மேலும் இறு­திப்­போ­ரின்­போது எதிர்­கொண்ட அவ­லங்­க­ளை­யும் தமி­ழர்­கள் மறந்­து­வி­ட­வில்லை. இத­னால் மகிந்த தரப்­புக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு அவர்­கள் தயங்­கவே செய்­வார்­கள்.

முஸ்­லீம் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் கட்சி ரீதி­யாக அவர்­கள் பிரிந்து காணப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளது தலை­மை­கள் வெவ்­வேறு திக்­கு­க­ளில் பய­ணிப்­ப­தை­யும் காண­மு­டி­கின்­றது. இத­னால் இவர்­க­ளின் வாக்­கு­கள் எந்த அணிக்­குப் போய்ச்­சே­ரும் என்­பதை இப்­போது எதிர்வு கூற­மு­டி­யாது.

மலை­ய­கத் தமிழ் மக்­க­ளும் ஒரே அர­சி­யல் தலை­மை­யின் கீழ் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அவர்­கள் அர­சி­யல் ரீதி­யில் பிள­வு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றார்­கள். அவர்­க­ளது வாக்­கு­க­ளும் பல­த­ரப்­புக்­க­ளுக்­கும் பிரிந்து அளிக்­கப்­ப­டு­மென்­ப­தைக் கூற­மு­டி­யும். ஆகவே கடந்த தடவை போன்று சிறு­பான்­மை­யின மக்­கள் அரச தலை­வர் தேர்­த­லில் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது

You might also like
X