இளம் சோடியால் முகம் சுழித்த பயணிகள்

0 1,250

தனியார் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டனரென்று இளைஞனும் இளம்பெண்ணும் நடத்துடநரால் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும் 782 இலக்கப் பேருந்தில் சில நாள்களுக்கு முன்னர் மாலை 5. 45அளவில் சம்பவம் இடம்பெற்றது.

அவர்களுடைய நடத்தையை சக பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். அதனால் நடத்துநர் இந்தச் சோடியை இடைவழியில் இறக்கிவிட்டார். அவரதுஅந்தச் செயலை   பேருந்தில் பயணித்தவர்கள் பாராட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like