ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவராக – மிச்செலி நியமனம்!!

ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவராக சிலி முன்னாள் அதிபர் மிச்செலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஜெயித் ராத் அல்-ஹுசைன் ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக கடந்த 2014 ஆ-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றார்.

அவர் இந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, அடுத்த தலைவர் நியமனம் குறித்து உறுப்பு நாடுகளின் பிராந்திய குழுக்களின் தலைவர்களுடன் குத்தேரஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு ஆணையத்தின் புதிய தலைவராக சிலி நாட்டின் முன்னாள் அதிபர் மிச்செலி பச்லெட் (66) நியமிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் நேற்று அறிவித்தார்.

இதையடுத்து, 193 உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்காக பச்லெட்டின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலரான பச்லெட், கடந்த 2006 முதல் 2010 வரை மற்றும் 2014 முதல் 2018 வரை என 2 முறை சிலி அதிபராக பதவி வகித்துள்ளார்.

சிலியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. இவரது பதவி காலம் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close