சிங்­க­ள­வர்­க­ளை தூண்­டி­விட்டு தமி­ழர்­களை இரு­ளில் தள்­ளி­வி­டும் -விஜ­யகலாவின் கருத்­­துக்கு இந்து சம்­மே­ள­னம் கண்­ட­னம்!!

0 112

சிங்­கள மக்­க­ளைத் தூண்டி மீண்­டும் இருண்ட யுகத்­துக்­குத் தமி­ழர்­க­ளைத் தள்­ளி­வி­டு­கின்ற விவே­க­மற்ற செய­லா­கவே இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் கூறிய கருத்து இருக்­கி­றது.
இவ்­வாறு இலங்கை இந்து சம்­மே­ளத்­தின் தலை­வர் நா.ரா. அருண்­காந்த் தெரி­வித்­தார்.

விஜ­ய­க­லா­வின் கருத்­தால் நாட்­டில் எழுந்­துள்ள கொதி­நிலை தொடர்­பில் கருத்­துப் பதி­வு­செய்ய இலங்கை இந்து சம்­மே­ள­னம் செய்­தி­யா­ளர் சந்­திப்பை பேரா­தனை ரஸ்ட் ஹவு­ஸில் நேற்­று நடத்­தி­யது.
அதில் சம்­மே­ள­னத் தலை­வர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போரின் பின்­ன­ரான வடக்கு கிழக்­கின் நிலை­மை­கள் திருப்­தி­க­ர­மா­ன­ தாக இல்­லை­யென்­பது அனை­வ­ரும் அறிந்­த­வி­ட­யம். போருக்­குப் பின்­னர் ஆட்­சி­பீ­டம் ஏறிய அர­சு­கள் தமிழ் மக்­கள் திருப்­திப்­ப­டும் அள­வுக்கு இல்­லா­விட்­டா­லும்­கூட குறைந்­தது 50 விகி­தம் என்று கூறக் கூடி­ய­ள­வே­னும் தமிழ் மக்­க­ளு­டைய மீள்­கட்­டு­மான விட­யங்­கள், மக்­க­ளு­டைய வாழ்­வா­தார விட­யங்­கள் இளை­யோ­ரின் தொழில் வாய்ப்பு, அங்கு இடம்­பெற்று வரு­கின்ற மிக­வும் மோச­மான குற்­றச் செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தல், போதைப் பொருள் ஒழிப்பு போன்­ற­வற்­றில் மெத்­த­னப் போக்­கைக் கடைப்­பி­டிக்­கின்ற சூழ்­நி­லையே நீடிக்­கி­றது.

விஜ­ய­க­லா­வின் உரை­யின் பின்­னர் நாட்­டிலே ஏற்­பட்­டுள்ள கொதி நிலை மோச­மான சூழ்­நி­லையை நோக்­கித் தமிழ் மக்­க­ளைத் தள்­ளு­வதை நாங்­கள் மிக­வும் தெளி­வாக உணர்­கின்­றோம். நான்கு ஆண்­டு­கால ஆட்­சி­யின் இறு­தி­யில் இந்த அரசோ, அரச நிர்­வா­கமோ, பொலிஸ் திணைக்­க­ளமோ குற்­றச் செயல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­த­வில்லை.

சிறப்­பா­கப் பணி­யாற்­ற­வில்லை என்று விஜ­ய­கலா குற்­றஞ்­சாட்­டு­வ­து­டன், இந்­தக் குறை­களை நிவர்த்தி செய்­வ­தற்கு மீண்­டும் விடு­த­லைப் புலி­கள் வருகை தந்­தால் சிறப்­பாக இருக்­கும் எனக் கூறி­யி­ருப்­பது அர­சி­யல் இரா­ஜ­தந்­தி­ர­மற்ற விவே­க­மற்ற கருத்­தா­கவே நாங்­கள் பார்க்­கின்­றோம். – என்­றார்.

You might also like