புகை உன் பகை – சிந்திப்பாயா?

0 22

புகைத்­தல் நாக­ரீ­கத்­தின் அடை­யா­ள­மா­கக் கரு­தப்­பட்ட ஒரு காலம் இருந்­தது. ஆனா­லும் அந்த நில­மை­கள் தற்­போது மாற்­றம் கண்­டுள்­ளது. புகைப்­பி­டிப்­ப­வர்­களை தீண்­டத்­த­கா­த­வர்­க­ளா­கப் பார்க்­கின்ற காலம் துளிர்­விட ஆரம்­பித்­துள்­ளது. இதற்­குக் கார­ணம் புகைப்­பி­டிக்­கும் பழக்­கம் என்­பது புகைப் பிடிப்­போரை மட்­டுமே பாதிப்பதில்லை, அவ­ரைச்­சுற்­றி­யுள்ள அனை­வ­ரை­யும் பாதித்து நோயாளி ஆக்­கி­வி­டும் தன்­மையை கொண்­டுள்­ளது. இத்­தகு காரண காரி­யம் கொண்டே பொது இடங்­க­ளில் புகைப் பிடிப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­றம் என்ற சட்­ட­விதி நடை­மு­றைக்கு வந்­தி­ருக்­கின்­றது.

புகை­யி­லைச் செடியை
பயி­ரி­டாது தவிர்ப்­போம்
கஞ்­சாச் செடி வளர்ப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­றம் என்­பதை நாம் அனை­வ­ரும் அறிந்­து­கொண்­டுள்­ளோம். ஆனால் பல இலட்­சம் மக்­க­ளைப் பாதிப்­புக்­குள்­ளாக்­கும் புகை­யி­லைச் செடியை வளர்ப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. உண்­மை­யில் நாம் பயி­ரி­டு­கின்ற ஒவ்­வொரு புகை­யி­லைச் செடி­யும் யாரோ ஒரு முகம் தெரி­யாது மனி­தனை நோயா­ளி­யாக்­கும் என்­பதை உணர மறுக்­கி­றோம்.
இது குறித்து நாம் சிந்­திக்க வேண்­டும். அழி­வில் இருந்து மீண்­டு­வர எம்மை நாமாக வழிப்­ப­டுத்த முன்­வர வேண்­டும். புகை­யிலை பயி­ரி­டும் விளை­நி­லத்­தில் மரக்­க­றிப் பயிர்­களை பயி­ரி­டு­வ­தன் மூலம் உண­வுத் தேவை­யில் தன்­னி­றைவு பெற முயற்­சிக்­க­லாம்.

நோய்
புகைப்­பி­டிப்­ப­தால் ‘பாரி­ச­வா­தம், மார­டைப்பு, புற்­று­நோய், சுவா­சம் சம்­பந்­த­மான நோய்­கள், குரு­திக் குழாய் சம்­பந்­த­மான நோய்­கள்’ எனப் பல பார­தூ­ர­மான நோய்­கள் ஏற்­ப­டு­ம்.இதனை நாம் அனை­வ­ரும் அறிந்­து­கொண்­டுள்ள போதும், புகைப்­பி­டிக்­கும் பழக்­கத்தை துடைத்­தெ­றி­யும் மார்க்­கம் தெரி­யாது துன்­பப்­ப­டு­கி­றோம்.

பாதிப்பு
ஒரு சிகரெட்­டின் புகை­யைக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக உள்­ளி­ழுக்­கும் போது வேதிப்­பொ­ருள்­கள் அணி­வ­குத்து உட­லின் முக்­கிய உறுப்­பு­க­ளான, ‘மூளை, நுரை­யீ­ரல், இத­யம் மற்­றும் குருதி நாளங்­கள்’ போன்­ற­வற்­றுள் உட்­செ­லுத்­தப்­ப­டு­கின்­றன. உட­லில் வேதிப்­பொ­ருள்­க­ளின் அளவு அதி­க­ரிப்­ப­தால் புற்­று­நோய் தாக்­கம் ஏற்­ப­டும்.
குறிப்­பாக புகை­பி­டித்­த­லுக்­கும் நுரை­யீ­ரல் புற்­று­நோய்க்­கும் இடை­யே­யான தொடர்பு குறித்து அனை­வ­ருக்­கும் தெரிந்­து­கொண்­டுள்ள போதும், புகைப்­ப­ழக்­கம் நுரை­யீ­ரல் தவிர்ந்த ஏனைய உடல் உறுப்­பு­க­ளை­யும் திசுக்­க­ளை­யும் கூட பாதிக்­கி­றது. இந்­தி­யா­வில் 10 மில்­லி­யன் மக்­கள் புகை­யி­லைப் பாவ­னை­யால் சாவ­டை­வ­தாக 1997 ஆம் ஆண்­டில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஓர் ஆய்­வ­றிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

புகை­யி­லை­யில் உள்ள முக்­கிய பொரு­ளான நிகோ­டின் ஓர் அடி­மைப்­ப­டுத்­தும் பொரு­ளா­கும். இந்த நிகோ­டின் தான் புகைப்­பி­டிக்­கும் உணர்­வைத் தூண்­டு­கி­றது. நிகோ­டின் மூளை வேதிப்­பொ­ரு­ளின் அளவை அதி­க­ரித்து புகைப்­பி­டிப்­ போரை இத­மான உணர்­வில் ஆழ்த்­து­கி­றது. ‘டோபா­மைன் அட்­ரி­னல்’ சுரப்­பி­யைத் தூண்டி ஹார்­மோன்­களை உற்­பத்தி செய்­கி­றது. இத­னால் குருதி அழுத்­த­மும் இத­யத் துடிப்­பும் அதி­க­ரிக்­கி­றது.

சிக­ரெட்­டின் புகை­யில் புற்­று­நோயை உரு­வாக்­கக்­கூ­டிய 60 இற்­கும் மேற்­பட்ட வேதிப்­பொ­ருள்­கள் உள்­ளடங்­கி­யுள்­ளன. ‘ஆர்­ச­னிக், சய­னைட்’ போன்ற விசப் பொருள்­கள் நுண்­ணிய அள­வில் உள்­ளன. மேலும் 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட வேதிப்­பொ­ருள்­க­ளும் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

அவற்­றுள் ஒன்று காபன் மோனாக்­சைட். இது குரு­தி­யில் உள்ள பிரா­ண­வா­யு­வின் இடத்­தைப் பிடித்­துக்­கொண்டு இத­யம், மூளை மற்­றும் அவ­சி­ய­மான பிற உறுப்­பு­க­ளில் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. மேலும் புகைப்­ப­ழக்­க­மா­னது சுவை உணர்­வை­யும் வாசனை உணர்­வை­யும் மந்­த­மாக்­கி­வி­டு­கின்­றது. இத­னால் முத­லில் இருந்­த­து­போன்று உணவைச் சுவைத்து உண்ண முடி­யாது.

பாதிப்­பில் இருந்து விடு­பட முயற்­சிப்­போம்
புகைத்­தல் தனி மனித உரிமை எனில், ஒரு­வரை புகைக்க வேண்­டாம் என்று வற்­பு­றுத்­து­வ­தற்கு யாருக்­கும் உரிமை இல்லை. ஆனால் புகைப்­பதை நிறுத்­திக் கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­ள­லாம். அது மட்­டுமே எம்­மால் முடிந்த ஆரம்ப அறி­வு­ரை­யாக இருக்க முடி­யும். புகைக்க விரும்­பி­னால் சன நட­மாட்­ட­மற்ற நல்ல காற்­றோட்­ட­மான இடத்தை தெரிவு செய்து அங்கு சென்று புகைத்­து க்­கொள்­ளுங்­கள். இத­னூடே குடும்­பத்­தை­யும் பிள்­ளை­க­ளை­யும் சுற்­றத்­த­வர்­க­ளை­யும் நீங்­கள் வெளி­வி­டு­கின்ற புகை­யின் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காத்­துக் கொள்­ள­லாம். ஏற்­ப­டப்­போ­கின்ற பாதிப்­பு­களை உங்­க­ளோடு மட்­டும் மட்­டுப்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.
புகைப் பழக்­கத்­துக்கு அடி­மை­யாகி இருக்­கும் ஒரு­வர் அந்த அடி­மைத்­த­னத்­தில் இருந்து விடு­தலை பெற்று வரும் போது, அந்­தப் பழக்­கத்­தி­னால் உட­லில் ஏற்­பட்ட தாக்­கங்­க­ளின் பெரும்­ப­கு­தி­யில் இருந்து மீண்டு வரு­வ­தற்­கான சந்­தர்ப்­பம் கிட்­டும்.

சிந்­தித்துச் செய­லாற்­று­வோம்
புகைப்­பி­டிக்­கும் பழக்­க­மு­டைய ஒவ்­வொ­ரு­வ­ரும் இப்­ப­ழக்­கத்­தி­லி­ருந்து முழு மன­தோடு விடு­பட்டு அதை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கும் போது, சில வேண்­டத்­த­காத அறி­ கு­றி­கள் தோன்­றின் மருத்­துவ உத­வியை பெற்­றுக்­கொள்­ள­வும். புகைப்­பி­டிக்­கும் பழக்­க­மு­டைய ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நாம் சந்­திக்­கும் சந்­தர்ப்­பங்­க­ளில் அவர்­களை இந்­தப் படு­கு­ழி­யி­லி­ருந்து காப்­பாற்­றி­வி­டு­வ­தற்கு எம்­மா­லான உத­வி­க­ளை­யும் ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்­கு­வோம்.

தன் உடலை அழித்து தான் சார்ந்த குடும்­பத்­தின் பொரு­ளா­தா­ரத்தை சிதைத்து, தனைச் சூழ்ந்­துள்­ள­வர்­க­ளின் சுகா­தா­ரத்தை சீர்­கு­லைக்­கும் செயற்­போக்­கு­டைய புகைப்­பி­டிப்­போரே சுய சிந்­த­னை­யோடு செயற்­ப­டுங்­கள். உடல் ஆரோக்­கி­யம் பெற்று வாழ முன்­வா­ருங்­கள்.

சி.சிவன்சுதன் , பொது மருத்­துவ நிபு­ணர்,
போதனா மருத்­து­வ­மனை, யாழ்ப்­பா­ணம்.

You might also like