side Add

மகிந்­த­வும், அவ­ரது அணி­யி­ன­ரும்- சீன நிதி விட­யத்­தில் மௌனி­கள்!!

சீன நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பணம் பெற்­ற­தான நியூ யோர்க் ரைம்ஸ் செய்தி உண்­மைக்­குப் புறம்­பா­னது என்று உறு­திப்­ப­டுத்த முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு முடி­யா­துள்­ளது.

அவர் உட்­பட அவ­ரது அணி­யி­னர் அனை­வ­ரும் மௌனி­க­ளாக இருக்­கின்­றமை அத­னால்­தான் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் தெரி­வித்­துள்­ளார்.

சில நாள்­க­ளா­கப் பல்­வே­றுப்­பட்ட விட­யங்­க­ளுக்­கா­கக் குரல் எழுப்­பிய எதிர்க்கட்­சி­யி­னர் இன்று வாய்­மூடி மௌனி­க­ளாக இருக்­கின்­ற­னர்.

சீன நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச 7.6 மில்­லி­யன் டொலர்­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார் என்று நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

அந்­தச் செய்தி தனக்­கெ­தி­ரான பொய்ப் பரப்புரை என்­றும் அந்­தப் பத்­தி­ரி­கைக்கு எதி­ரா­கச் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளைத் தனது சட்­டத்­த­ர­ணி­யி­டம் ஒப்­ப­டைத்­தி­ருப்­ப­தா­க­வும் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தி­ருந்­தார்.

எனி­னும் தற்­போ­தைய அர­சி­யல் சூழ­லில் வேறு விட­யங்­க­ளைப் புகுத்­து­வ­தன் மூலம் இந்த விவ­கா­ரம் மழுங்­க­டிக்­கப்­ப­டும் சாத்­தி­யக் கூறு­கள் காணப்­ப­டு­கின்­றன – என்­றார்.

You might also like
X