மாற்­றுத்­தி­ற­னு­டைய பிள்­ளை­கள் கல்­வி­க ற்க தனி­யான பிரிவு உரு­வாக்­கப்­பட வேண்­டும்!

மாற்­றுத்­தி­ற­னு­டைய பிள்­ளை­கள் கல்வி கற்­ப­தற்­காக தனி­யான பிரிவு ஒன்றை வட­ம­ராட்சி கல்வி வல­யத்­தி­னுள் உரு­வாக்க வேண்­டும் என வட­க்கு மா­கா­ண­சபை உறுப்­பி­னர் அகி­ல­தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

வட­ம­ராட்சி வல­ய­க் கல்வி அலு­வ­லக முகா­மைத்­துவ மண்­ட­பத்­தில் நடை­பெற்ற பன்னாட்டு மாற்­றுத்­தி­ற­னு­டை­யோர் நிகழ்­வில் கலந்து கொண்டு உரையாற்­றும்போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வட­ம­ராட்சி மண்­ணில் நான்கு பாட­சா­லை­க­ளில் இந்த சிறப்புத் தேவை­யு­டைய பிள்­ளை­கள் ஆங்­காங்கே பகுதி பகு­தி­யாக கல்வி பயின்று வரு­கின்­றார்­கள். ஆயி­னும் இவர்­கள் அனை­வ­ரை­யும் ஒன்றி ணைத்து ஒரு சிறப்புப் பிரிவை உரு­வாக்கி கல்வி புகட்ட வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

இதன் மூலம் அந்த மாண­வர்­க­ளின் அறி­வுத்­தன்­மையை அதி­க­ரிக்க முடி­யும் என்­ப­து­டன், அவர்­களைப் பயிற்­று­விக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் இல­கு­வாக இருக்­கும்.
நான் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ராக இருந்­து­வ­ரும் கடந்த 2 வரு­டங்­க­ளில் பல்­வே­று­பட்ட மக்­க­ளுக்கு உதவி புரிந்­துள்­ளேன்.

ஆனால் இவ்­வாறு வட­ம­ராட்­சி­யில் இத்­தனை சிறப்புத் தேவை­யுடை மாண­வர்­கள் இருக்­கின்­றார்­கள் என்­பதை இன்­று­தான் தெரிந்து கொண்­டேன்.

அடுத்த ஆண்­டில் மாகா­ண­ச­பை­யின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஒதுக்­கீட்­டில் அவர்­க­ளின் தேவைக்­கா­க­வும் எனது நிதி­யைப் பங்­கீடு செய்யக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன் என்­ப­தை­யும் இங்கே தெரி­விக்க விரும்­பு­கின்­றேன்- –என்­றார்.

 

You might also like