முன்னாள் புத்த துறவிக்கு -114 ஆண்டுகள் சிறை!!

தாய்லாந்து நாட்டில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை பாலியர் துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை நிதி திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டொலர் சேமிப்பில் வைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக் கொண்டு வந்து விசாரணை நடத்தியது. இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, இணைய வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close