வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல்!!

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நால்வர் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் வெல்லவாய வெஹேரயாய பிரதேசத்தில் நடந்துள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த நால்வர், அங்கிருந்தவர்களை பொல்லுகளினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பொல்லுகளால் தாக்கி விதம் கைடயக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த தந்தை, மகள் மற்றும் மகனும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like