இரா­ணுவ வச­முள்ள காணி­கள் தொடர்­பில் மாறு­பட்ட விவ­ரங்­கள் வெளி­யீடு

0 209

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச செய­லர் பிரி­வில் படை­யி­ன­ரி­டம் உள்ள நிலம் தொடர்­பில் படை­யி­ன­ரால் மாறு­பட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும்  தெரி­வித்­த­தா­வது:

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச செய­லர் பிரி­வில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் 200 ஏக்­கர் நிலம் மட்­டுமே உள்­ள­தாக இரா­ணு­வத்­தி­ன­ரால் கடந்த 28ஆம் திகதி இடம்­பெற்ற பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அந்தத் தர­வில் உண்மை கிடை­யாது. ஏனெ­னில், முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தின் 2015- ஆம் ஆண்டு -தர­வு­க­ளின் பிர­கா­ரம் புதுக்­கு­டி­யி­ருப்­பில் ஆயி­ரத்து 152 ஏக்­கர் நிலம் இரா­ணு­வம் வசம் உள்­ள­தாக ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

இவ்­வாறு ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­ட­தன் பின்­னர் பிரி­வில் நூறு ஏக்­கர் நிலம்­கூட விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில் எவ்­வாறு குறித்த அளவு 200 ஏக்­க­ராக மாற்­றம் பெற்­றது என்­பதை  அறிய இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள மக்­க­ளின் காணி­க­ளின் விவ­ரத்­தை அடுத்த ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­தில் வழங்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது – என்­றார்.

குறித்த விட­யம் தொடர்­பில் பிர­தேச செய­லர் மரு­த­லிங்­கம் பிர­தீ­ப­னைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,
‘‘பிர­தேச செய­ல­கத்­தில் மக்­க­ளால் ஆவண ரீதி­யா­க­வும் ஆவ­ணம் இன்­றி­யும் உரிமைகோரி பதி­வு­கள் மேற்­கொண்ட நிலங்­க­ளாக இது­வரை  67 பேருக்குச் சொந்­த­மான 374 ஏக்­கர் நிலங்­கள் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றன.  இதே­நே­ரம் பதி­யப்­ப­டா­மலோ அல்­லது திணைக்­க­ளங் களுக்குச் சொந்­த­மான நிலங்­களோ இருப்­பின் அவை தொடர்­பில் இது­வரை எவ­ரும் எம்­மி­டம் உரிமை கோர­வில்லை’’ எனப் பதி­ல­ளித்­தார்.-

You might also like