side Add

கூட்டு அர­சின் இய­லா­மை­யால்­ தான் கொலை, குற்­றங்­கள் நீடிக்­கின்­றன -மகிந்த!!

அர­சின் இய­லா­மையே நாட்­டில் கொலை உள்­ளிட்ட குற்­றச் செயல்­கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­ற­மைக்கு கார­ணம் என்று முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

முத்­தி­யங்­கன ரஜ­மஹா விகா­ரைக்­குச் சென்ற அவ­ரி­டம், ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு தமிழ் மக்­களை ஏமாற்­று­வதை எடுத்­துக் காட்­டு­வ­தா­கவே முன்­னாள் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கூற்று அமைந்­துள்­ளது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்­துக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

தற்­போ­தைய தேசிய அரசு தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றா­மையே அந்­தக் கருத்­து­க­ளுக்­குக் கார­ணம் என்று மகிந்த மேலும் தெரி­வித்­தார்.

You might also like
X