side Add

சாரதி பத்திரத்துக்கான – மருத்துவச் சான்றிதழ் – பெறுவதில் மக்கள் சிரமம்!!

சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான மருத்­து­வச் சான்­றி­த­ழைப் பெறு­வ­தற்கு தேசிய போக்­கு­வ­ரத்து நிறு­வ­னத்­தின் யாழ்ப்­பா­ணக் கிளை­யில் நீண்­ட­நே­ரம் காத்­தி­ருக்­கும் நிலமை இன்னமும் தொடர்­கின்­றது என்று அங்கு செல்­வோர் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

அதி­காலை 3 மணிக்குச் சான்­றி­தழ் பெற­வ­ரு­ப­வர்­கள் கிட்­டத்­தட்ட மதி­யம் ஒரு மணி வரை­யில் காத்­தி­ருக்­கின்­ற ­னர்.

தின­மும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­ வர்­கள் வரு­கை­த­ரும் இந்த நிறு­வ­னத்­தில் வரு­ப­வர்­கள் அம­ரக்­கூ­டிய இருக்கை வச­தி­க­ளும் போது­மா­ன­தாக இல்லை. கிட்­டத்­தட்ட 22 கதி­ரை­களே காணப்­ப­டு­கின்­றன. நூற்றுக் கணக்கானவர்களில் ஏனை­ய­வர்­கள் கால்­க­டுக்க நிற்­கின்­ற­னர்.

கடந்த வார­மும் இவ்­வாறு மக்­கள் காத்­தி­ருக்க மருத்­து­வர் மதி­யம் 12.30க்கு வரு­கை­தந்து 1.30 மணிக்கே புறப்­பட்­டு­ விட்­டார் என அங்கு சென்­ற­வர்­கள் தெரிவித்தனர்.

இது தொடர்­பில் தேசிய போக்­கு­வ­ரத்து மருத்­துவ நிறு­வ­னத்­து­டன் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, ‘‘இந்த விட­யம் தொடர்­பில் தொடர்ந்­தும் முறைப்­பா­டு­கள் வந்­த­வாறு உள்­ளன. எமக்­கான நிலைய மருத்­து­வர் வரு­கை­த­ரும் நேரம் 8.30மணி. பணி­யா­ளர்­கள் வரு­கை­தந்து 8மணிக்கு அடை­யாள எண்­களை (டோக்­கன்­களை) வழங்­கு­கின்­றனர்.

எனி­னும் மருத்­துவ அறிக்­கை­களை பெற வரு­ப­வர்­கள் அதி­கா­லை­க­ளிலே வந்து காத்து நிற்­ப­தற்கு எம்­மால் பொறுப்­புக் கூற முடி­யாது. வாட­கைக் கட்­ட­டத்­தி­லேயே மருத்­துவ நிலை­யம் இயங்கி வரு­கி­றது. தேவை­யான பொருள்­கள் தொடர்­பாக நாம் மேலி­டத்­துக்கு அறி­வித்­துள்­ளோம்.

இருந்­தும் பயன் கிடைக்­க­பெ­ற­வில்லை. இத­னா­லேயே வரு­ப­வர்­கள் வெயி­லி­லும் கால்­க­டுக்­க­வும் நிற்­க­வேண்­டி ­யுள்­ளது. குறித்த தினத்­தில் எமது மருத்­து­வர் விடு­மு­றை­யில் இருந்­தார். எனவே மற்­றைய பகு­தி­நேர மருத்­து­வர் வரு­கை­தந்தே சிகிச்­சை ­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மக்­கள் அதி­காலை வேளை­யில் வந்து காத்து நிற்­கா­மல் உரிய நேரத்­துக்கு வரு­கை­தந்து சேவையைப் பெறு­மாறு கோரப்­ப­டு­கின்­றார்­கள்’’-­என்று தெரி­வித்­தார்.

You might also like
X