சிங்கராஜா வனத்தில்- இனி வெள்ளை எருமை இல்லை!!

0 20

சிங்கராஜா வனத்தில் தப்பியிருந்த ஒரேயொரு வௌ்ளை எருமையும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது என்று வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் எருமை விழுந்துக் கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்​துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் எருமையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

வௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் குறித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like