side Add

நிதிமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி பணியாளர்கள் ஐவர் பணி நீக்கம் !!

வவு­னியா வடக்குப் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட சமுர்த்தி அபி­வி­ருத்தி பணி­யா­ளர்­கள் ஐவர் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் பணி நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று வவு­னியா மாவட்ட சமுர்த்தி நிர்­வாக இயக்­கு­நர் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் தெரி­ய­வ­ரு­தா­வது:
சமுர்த்திப் பய­னா­ளி­க­ளின் பெயர் விவ­ரங்­க­ளின் மூலம் வவுனியா புளி­யங் குளம் சமுர்த்தி வங்­கி­யில் கடன்­க­ளுக்கு விண்­ணப்­பித்து கடன்­தொ­கையைப் பெற்று நிதி மோசடி செய்­த­னர் என்று வவு­னியா மாவட்டச் சமுர்த்­திப் பணி­யா­ளர்­கள் சிலர் மீது கடந்த காலங்­க­ளில் குற்­றம் சுமத்தப்பட்டது.

இத­னை­ய­டுத்து மாவட்ட சமுர்த்­தித் திணைக்­க­ளம் இது தொடர்­பாக குழு அமைத்து விசா­ரணை செய்­தது.

பின்­னர் வவு­னியா மாவட்ட சமுர்த்தி இயக்­கு­நரின் வேண்­டு­கோ­ளுக்கு­மைய கொழும்­பில் உள்ள சமுர்த்தித் திணைக்­க­ளத்­தின் தலைமை பணி­ம­னை­யின் மூலம் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

விசா­ர­ணை ­க­ளின் முடி­வு­க­ளின் பிர­கா­ரம் வவு­னியா வடக்குப் பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட ஐவர் குறித்த குற்­றச் சாட்­டில் ஈடு­பட்­டுள்­ளமை உறுதி செய்­யப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டை­யில் குறித்த ஐவ­ரை­யும் பத­வி­யில் இருந்து நீக்­கு­மாறு சமுர்த்­தித் தலைமை அலு­வ­ல­கத்­தில் இருந்து வவு­னியா மாவட்டச் செய­ல­கத்­துக்கு கடந்த 3ஆம் திகதி கடி­தம் மூலம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனினும் மாவட்டச் செயலர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் உரியவர்க ளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட வில்லை.

விரைவில் மாவட்ட இயக்­கு­நர் மற்­றும் அரச அதி­பர் ஊடாக வவு­னியா வடக்குப் பிர­தேச செய­லா­ள­ருக்கு குறித்த கடி­தம் அனுப்­ப­ப்பட்டு அவர்­க­ளுக்­கான பணி இடை­நி­றுத்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்று வவு­னியா மாவட்ட சமுர்த்தி இயக்­கு­நர் தெரி­வித்­தார்.

குறித்த ஐவ­ரும் 2013ஆம் ஆண்டு சமுர்த்தி திணைக்­க­ளத்­துக் குள் உள்­ளீர்க்­கப்­பட்­ட­வர்­கள் என்­பது குறிப்­பி­ டத்­தக்­கது.

You might also like
X