மலைக்க வைத்த ஜேர்மன் தமிழர்கள்!!

0 25

ஜேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் தெருவிழா நேற்றுச் சிறப்புற நடைபெற்றது.

அதில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்களும் மற்றும் பிறநாட்டவர்களும் கலந்து கொண்டனர்.

தெருவில் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான குதிரையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் என்பன அணிவகுத்து நடைபெற்றன.

வீதியெங்கும் தாயகத்தை நினைவுபடுத்தும் வகையில் கடைகள் அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் பெரும் உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்ததுடன் தமிழர்களுடைய பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள தெருவில் திருவிழா நடைபெற்றது.

You might also like