முன்பள்ளிக் கல்வியில் – கழிவு முகாமைத்துவம் -நல்லூர் பிரதேச சபை!!

நல்­லூர் பிர­தேச சபை­யின் ஆளு­கைக்­குட்­பட்ட முன்­பள்­ளி­க­ளில், கழிவு முகா­மைத்­து­வம் சார்ந்த கல்­வி­யை­யும், விளை­யாட்­டு­க்க­ளை­யும் உள்­ள­டக்­கு­வது என நல்­லூர்ப் பிர­தேச சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம், நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் சபை­யின் தவி­சா­ளர் கரு­ணா­க­ர­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை சபை உறுப்­பி­னர் மது­சு­தன் முன்­மொ­ழிந்­தார்.
அவர் தனது பிரே­ர­ணை­யில் தெரி­வித்­த­ தா­வது:

எமது சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட முன்­பள்­ளி­க­ளில் கல்வி கற்­கும் மாண­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் பாடத் திட்டத்துக்குள் கழிவு முகாமைத்துவத்தையும் சேர்க்க வேண்டும். கழிவு முகா­மைத்­து­வம் என்­றால் என்ன? அதனை எவ்­வாறு செய்­வது என பயிற்­சி­யு­டன் கூடிய கல்­வியைப் புகட்ட வேண்­டும்.

ஏனெ­னில் முன்­பள்ளி மாண­வர்­கள் சிறு­வர்­கள். எனவே குப்­பை­களை தரம்­பி­ரித்து உக்­காத பொருள்­களை எங்கு போட­வேண்­டும், உக்­கக் கூடிய குப்­பை­களை எங்கு போட­வேண்­டும் என பழக்க வேண்­டும். சிறு வய­தில் இருந்தே பழக்­கி­னால் தான் எதிர்­காலச் சந்­த­திக்கு கழிவு முகா­ மைத்­து­வம் தொடர்­பில் விழிப்­பு­ணர்­வைக் கொண்டு வர­மு­டி­யும்.

கல்­வி­யு­டன் மட்­டும் நின்­று­வி­டாது முன்­பள்ளி மாண­வர்­க­ளின் விளை­ யாட்­டுக்­க­ளி­லும் கழிவு முகா­மைத்­து­வத்தை உள்­ள­டக்க வேண்­டும். அதா­வது கழி­வு­களை தரம்­பி­ரிப்­பது எவ்­வாறு என்­பது தொடர்­பான விளை­யாட்­டுக்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக மாண­வர்­களை அதில் ஆர்­வம் கொள்­ளச் செய்ய வேண்­டும்.

இதன் ஊடாக இளைய சமு­தா­யத்­துக்கு கழிவு முகா­மைத்­து­வத்­தைக் கொண்டு செல்ல முடி­யும் -என்­றார். உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்க ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

You might also like