அமைச்சர்களின் நியமனப் பிரச்சினையை சர்ச்சைக்குரிய விடயமாக்கியது முதல்வரே-வடக்கு மாகாண அவைத்­த­லை­வர்!!

0 160

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­க­ளின் நிய­ம­னங்­க­ளில் ஏற்­பட்ட பிரச்­சி­னையை மிக இல­கு­வாக தீர்த்து இருக்­க­லாம். ஆனால் அதனை சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக்­கி­யது வடக்கு மாகாண முதல்­வர் சி.சி.விக்­னேஸ்­வ­ரன். அவர் மிகப் பெரும் தவறு செய்து விட்­டார் என்று வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண அவைத்­த­லை­வ­ரின் இல்­லத்­தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் அமைச்­சர்­க­ளில் இரு­வரை பதவி நீக்­கம் செய்ய வேண்­டும் என்று முதல்­வர் அமைத்த விசா­ர­ணைக் குழு பரிந்­து­ரைத்­தது. அதன்­படி இரு­வ­ரை­யும் பதவி நீக்கி விட்டு மாகாண சபை­யின் அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்றி அமைத்து இருந்­தால் இது ஒரு பூதா­க­ர­மாக விட­ய­மாக மாறி இருக்­காது.

வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர், விக்­னேஸ்­வ­ரனை பதவி வில­கு­மாறு கோரி­யது போல நானும் கூற மாட்­டேன். வடக்கு மாகாண முதல்­வர் ஒரு நீதி­ய­ர­சர் ஆனால் அவரை சுற்றி பல சுத்­து­மாத்­துக்­கா­ ரர்­கள் உள்­ள­னர். நான் ஏதா­வது ஆலோ­சனை சொன்­னால் அதற்கு எதி­ரா­கத்­தான் அவர் செய்­வார். ஆகை­யால் நான் அவ­ரு­டைய விட­யத்­தில் தலை­யி­டு­வ­தில்­லை-­ – என்­றார்.

You might also like