ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்!!

0 18

இலங்கையை சேர்ந்த ஒரு தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

10 க்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு வருடகாலத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாவர். இவர்களில் சிலரின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்கின்றன. அந்த நிலையிலும் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ரேலிய பல தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் பேர்த்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பபட்டுள்ளனர்.

You might also like